லம்போர்கினி உரஸ் எஸ்யூவி ஹைபிரிட் மாடல் வருகை

பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் கார் தயாரிப்பாளரான லம்போர்கினி நிறுவனத்தின் உரஸ் எஸ்யூவி முதல் லம்போர்கினியின்  ஹைபிரிட் என்ஜினை பெறும் மாடலாகும். லம்போர்கினி உரஸ் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரவுள்ளது.

 

அடுத்த வருடத்தின் தொடக்க மாதங்களில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரவுள்ள உரஸ் எஸ்யூவி மாடலில் பிளக்-இன் ஹைபிரிட்  4.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பென்டைகா மற்றும் ஆடி க்யூ7 கார்களில் இடம்பெற்றுள்ள என்ஜினாகும்.

உரஸ் எஸ்யூவி

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MLB தளத்தில் வடிவமைக்கப்படுகின்ற உருஸ் எஸ்யூவி கார் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய மாடலாக விளங்கும் அதாவது ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான செயல்திறனை வழங்கும் இந்த எஸ்யூவியில் ஆல் வீல் டிரைவ் , ரியர் வீல் டிரைவ் என ஒன்றுக்கு மேற்பட்ட வேரியன்ட் மற்றும் என்ஜின்கள் இடம்பெற்றிருக்கலாம்.

முதன்முறையாக 2012 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட லம்போர்கினி உரஸ் கான்செப்ட் எஸ்யூவி மாடல் உற்பத்திக்கு 2015 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தயாரிப்பினை எட்டியுள்ள இந்த மாடலுக்கு புதிதாக 1500 பணியாளர்கள் மற்றும் ஆலையை விரிவாக்கம் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது. 2018 முதல் உரஸ் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

Recommended For You