லம்போர்கினி கல்லார்டோ சிறப்பு பதிப்பு அறிமுகம்

0
லம்போர்கினி பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி சிறப்பு பதிப்பாக லம்போ கல்லார்டோ காரை ரூ.3.06 கோடி விலையில் இந்தியாவின் தேசிய கொடியின் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவிற்க்கு 6 கார்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இவற்றில் ஒரு கார் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.  மூன்று விதமான வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். அவை மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை என ஒவ்வொரு வண்ணத்திலும் இரண்டு கார்கள் இருக்கும்.

லம்போர்கினி  கல்லார்டோ

லம்போர்கினி கல்லார்டோ காரில்  5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 542 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

 லம்போர்கினி  கல்லார்டோ காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 320 கிமீ ஆகும்.

லம்போர்கினி  கல்லார்டோ விலை ரூ.3.06 கோடியாகும்.