லம்போர்கினி நிறுவனத்தின் மிக பிரபலமான சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரான கல்லார்டோ உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட்டது. கல்லார்டோவிற்க்கு மாற்றாக கேப்ர்ரி என்ற பெயரில் காரினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
லம்போர்கினி வரலாற்றிலே அதிகப்படியான கார்கள் விற்ற மாடல் என்ற பெருமையை கல்லார்டோ பெற்றுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த கல்லார்டோ இதுவரை 14022 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.
இந்தியாவில் 85 கல்லார்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றில் சில முக்கியமானவர்கள் அனில் அம்பானி, ஜான் ஆப்ரஹாம் போன்றவர்கள் அடங்குவர்.
40 வருட கால லம்போர்கினி வரலாற்றில் 30000 கார்கள் விற்க்கப்பட்டுள்ளன. அவற்றில் கல்லார்டோவின் பங்கு பாதிக்கு சற்றுதான் குறைவாகும்.
மிகவும் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இதன் ஆற்றல் 562பிஎச்பி ஆகும்.