கடந்த 54 ஆண்டுகால லம்போர்கினி வரலாற்றில் தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களாக லம்போர்கினி கார் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றது. கடந்த 2016 ஆம்  ஆண்டில் லம்போர்கினி 3457 சூப்பர் கார்களை விற்பனை செய்துள்ளது.

லம்போர்கினி விற்பனை விபரம்

கடந்த 2003 ஆம் ஆண்டில் முதன்முறையாக 1000 கார்கள் என்ற விற்பனை இலக்கினை கடந்த லம்போர்கினி 2006 ஆம் ஆண்டில் 2000 வாகனங்களும் 2015யில் 3000 வாகனங்களையும் கடந்து சென்ற 2015 ஆம் வருடத்தை விட 2016யில் 212 கார்களை கூடுதலாக விற்பனை செய்து 7 சதவீத வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.

சர்வதேச அளவில் 50 நாடுகளில் 135க்கு மேற்பட்ட டீலர்களின் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்ற லம்போர்கினி சூப்பர்கார்கள் 2016யில் தனி நாட்டின் சந்தையில் அமெரிக்காவில் 1041 கார்களையும் அதனை தொடர்ந்து ஜப்பான் , இங்கிலாந்து , ஜெர்மனி , கனடா , மத்திய கிழக்கு மற்றும் சீனா போன்றவை உள்ளன. மேலும் மொத்த விற்பனையில்  EMEA (Europe, Middle East, Africa) எனப்படும் நாடுகளில் அதிகபட்சமாகவும் , அதனை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஆசியா பசுபிக் பிராந்தியம் உள்ளது.

தொடர்ந்து கடந்த சில வருடங்களாக அபரிதமான வளர்ச்சி அடைந்து வரும் சூப்பர் கார்களின் பங்களிப்பில் லம்போர்கினி முக்கிய பங்கு வகிக்கின்றது. வருகின்ற 2018 ஆம் ஆண்டில் லம்போர்கினி உரஸ் எஸ்யூவி சந்தைக்கு வரவுள்ளது.