அடுத்தடுத்து வரவுள்ள புதிய கார்கள் – 2016

இந்தியாவில் அடுத்தடுத்து வரவுள்ள புத்தம் புதிய கார் மாடல்கள் எவை என்பதனை இந்த பட்டியலில் தெரிந்துகொள்ளலாம். 2016 ஆம் ஆண்டில் வரவுள்ள கார்களின் முன்னோட்ட விபரங்கள்…

toyota-innova-crysta

1. டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா பெட்ரோல்

இன்னோவா க்ரீஸ்ட்டா டீசல் மாடலின் வெற்றியை தொடர்ந்து வரவுள்ள இன்னோவா பெட்ரோல் மாடல் அடுத்த சில வாரங்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இதில் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

2. ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல்

அமியோ காரின் பெட்ரோல் மாடல்கள் டெலிவரி தொடங்கப்பட்டுள்ள நிலையில் மேம்பட்ட புதிய TDI  இஞ்ஜின் பெற்ற டீசல் அமியோ செடான் கார் அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

ameo-features

3. ஜீப் கிராண்ட் செரோக்கீ

இந்திய சந்தையில் களமிறங்க உள்ள ஃபியட் கிறைசலர் குழுமத்தின் அங்கமான ஜீப் பிராண்டில் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி ஸ்போர்ட்டிவ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.

jeep-grand-cherokee

4. ஜீப் ரேங்கலர்

ஆகஸ்ட் மாத இறுதியில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி கார் மாடலும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. 197 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி கார் சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தினை வழங்கும் தலைசிறந்த பாரம்பரிய பெருமை பெற்ற எஸ்யூவி மாடலாகும்.

jeep-wrangler-side

5. மாருதி சுசூகி பலேனோ ஆர்எஸ்

மாருதி பலேனோ காரின் ஆர்எஸ் மாடலாக வரவுள்ள பலேனோவில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடலாக விளங்கும். ஆரம்பத்தில் பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பலேனோ மற்றும் விட்டாரா விட்டாரா பிரெஸ்ஸா வரவேற்பினால் காலதாமதமாக வெளியாகலாம்.

maruti-suzuki-baleno-rs

6. மாருதி இக்னிஸ்

பண்டிகை காலத்தில் வெளிவரவிருந்த இக்னிஸ் தற்பொழுது விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மற்றும் பலேனோ காரின் காத்திருப்பு காலம் 6 முதல் 9 மாதம் வரை காத்திருப்பு காலம் உள்ளதால் இக்னிஸ் காரும் காலதாமதமாக அடுத்த வருடத்தில் வெளியாகலாம்.

maruti-suzuki-IGNIS-concept

7. மஹிந்திரா மினி பொலிரோ

4 மீட்டருக்கு குறைவான மாடலாக அவதாரம் எடுக்க உள்ள மஹிந்திரா மினி பொலிரோ எஸ்யூவி வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியாகலாம். தோற்ற மாற்றங்கள் பெரிதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

8. ஹூண்டாய் ஐ20 ஆட்டோமேட்டிக்

ஐ20 காரின் பெட்ரோல் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் அடுத்த சில வாரங்களில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. 4 வேக அல்லது 6 வே ஆட்டோ கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜினில் இடம்பெற்றிருக்கும்.

 

ஹூண்டாய் எலைட் ஐ20

9. செவர்லே பீட்

மேம்படுத்தப்பட்ட புதிய செவர்லே பீட் கார் அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்ற மாடலாக இஞ்ஜின் ஆற்றலில் மாற்றம் இல்லாமல் வரவுள்ளது.

Next-gen-Chevrolet-Beat

10. ஹூண்டாய் எலன்ட்ரா

புதிய மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எலன்ட்ரா செடான் கார் தொடர்ச்சியாக சோதனை ஓட்டத்தில் உள்ள நிலையில்  செப்டம்பர் இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

2016-Hyundai-Elantra-leaked

11. ஹூண்டாய் டூஸான்

டூஸான் எஸ்யூவி கார் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையில் களமிறங்க உள்ள நிலையில் க்ரெட்டா காருக்கு இனையான வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதில் ஹூண்டாய் மிகுந்த ஈடுபாட்டுடன் உள்ளது.

hyundai-tucson

12. புதிய ஆடி ஏ4

5வது தலைமுறை புதிய ஆடி ஏ4 செடான் கார் ஆகஸ்ட் மாத இறுதியில் சந்தைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. ஏ4 கார் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கும்.

new-audi-a4

13. ஜாகுவார் எஃப் பேஸ்

ஜாகுவாரின் முதல் எஸ்யூவி க்ராஸ்ஓவர் ரக மாடலான  ஜாகுவார் எஃப் பேஸ் கார் முழுதும் வடிவமைக்கப்பட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

Jaguar-FPace-min

14. ஜாகுவார் எக்ஸ்இ டீசல் வேரியண்ட்

விற்பனையில் உள்ள ஜாகுவார் எக்ஸ்இ பெட்ரோல் வேரியண்ட் மாடலுடன் கூடுதலாக ஜாகுவார் எக்ஸ்இ டீசல் வேரியண்டில் 2.0 லிட்டர் இஞ்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

jaguar-XE-launched-in-india

15. ரெனோ க்விட் ஏஎம்டி

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் க்விட் ஏஎம்டி கியர்பாக்ஸ் என இரு ஆப்ஷன் வேரியண்ட்களும் பண்டிகை காலத்தில் விற்ப்பனைக்கு வெளியிடப்படலாம்.

renault-kwid-amt