வானா கிரை சைபர் தாக்குதலில் சிக்கிய ஹோண்டா ?

வானா கிரை எனப்படும் ரேன்சம்வேர் வகையைச் சார்ந்த தீம்பொருள் மே மாதம் முதன்முதலாக பரவியதை தொடர்ந்து 150 க்கு மேற்பட்ட நாடுகளில் 3.50 லட்சம் கனிணிகள் பாதிப்பட்டிருந்த நிலையில் ஜப்பான் ஹோண்டா கார் தயாரிப்பு பிரிவு வானா கிரை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

2016 Honda Accord

வானா கிரை சைபர் தாக்குதல்

ஜப்பான் நாட்டின் டோக்கியா தலைநகரின் அருகில் உள்ள சயாமா ஆலையில் வானாக்கிரை ரேன்சம் வேர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறியப்பட்டது முதல் தற்காலிகமாக சில நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில்  மீண்டும் ஆலை நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த ஆலையில் ஹோண்டா ஆக்கார்டு, ஒடிஸி மினிவன் மற்றும் ஸ்டெப் வேகன் போன்ற கார்கள் ஒரு நாளைக்கு 1000 கார்கள் உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ள இந்த ஆலையில் முதன்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வானாக்கிரை தாக்குதலுக்கு உள்ளாகியதை கண்டுபிடித்த நிலையில் திங்கட்கிழமை  உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட பின்னர் ஆலை செயல்பட தொடங்கியுள்ளது.

2017 honda city facelift

கடந்த மே மாத மத்தியில் பல்வேறு நாடுகளில் நடந்த வானா கிரை தாகுதலால் ரெனோ மற்றும் நிசான் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த மால்வேரின் புதிய பதிப்பு பரவிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.