வால்வோ எக்ஸ்சி90 பிரிமியம் வேரியண்ட்கள் எப்பொழுது

0
வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி காரின் பிரிமியம் வேரியண்ட் மாடல்களான T8 ஹைபிரிட் வேரியண்ட் மற்றும் 4 இருக்கைகள் மட்டுமே கொண்ட எக்ஸ்லென்ஸ் சொகுசு மாடல் போன்றவை இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

வால்வோ XC90 T8 ஹைபிரிட்
வால்வோ XC90 T8 ஹைபிரிட் வேரியண்ட்

வால்வோ எக்ஸ்சி90 பிரிமியம் எஸ்யூவி காருக்கு மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த ஆண்டிற்க்கு மொத்தம் 350 கார்களை மட்டுமே விற்பனை செய்ய இலக்கினை வைத்திருந்தாம். ஆனால் டீலர்களிடம் பெறப்பட்டுள்ள விவரங்களின் படி 500 கார்களுக்கு மேல் தேவைப்படுகின்றதாம்.

உலகளவில் வால்வோ XC90 காரின் இந்த ஆண்டிற்க்கான மொத்த உற்பத்தி இலக்கு 90,000 கார்களாகும். அவற்றில் 30,000 கார்கள் விற்பனை ஆகிவிட்டதாம்.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி முழுவிபரம்

வால்வோ எக்ஸ்சி90 எக்ஸ்லென்ஸ்
Volvo XC90 4 Seat Excellence trim

பிரிமியம் வேரியண்ட்கள்

XC90 T8 ஹைபிரிட் வேரியண்ட் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாம். ஹைபிரிட் கார் என்றால் இரண்டு விதமான ஆற்றலை கொண்டு இயங்கூடிய காராகும். இந்த காரில் பெட்ரோல் மற்றும் மின்ஆற்றல் கொண்டு இயங்கும்

வால்வோ XC90 T8 ஹைபிரிட் முழுவிபரம்

வால்வோ எக்ஸ்சி90 எக்ஸ்லென்ஸ்

மிகவும் சொகுசான வசதிகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்சி90 எக்ஸ்லென்ஸ் வேரியண்ட் 4 இருக்கைகளை மட்டுமே கொண்டிருக்கும். மிக அதிக இடவசதி பல நவீன சொகுசு அம்சங்கள் என பலவற்றை கொண்டிருக்கும்.

வால்வோ எக்ஸ்சி90
Volvo XC90  Excellence trim

இந்த இரண்டு உயர்தர வேரியண்ட்களும் இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வால்வோ எக்ஸ்சி90

      

 Volvo XC90 SUV Premium trims are XC90 Excellence and T8 Hybrid trim are launch expected mid of the next year.