ஸ்கார்பியோ விற்பனையில் புதிய சாதனை

0
மஹிந்திரா நிறுவனத்தின் மிக பிரபலமான எஸ்யூவி காரான ஸ்கார்பியோ விற்பனையில் 400,000 கார்களை கடந்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ஸ்கார்பியோ மாதம் 3000 கார்களை வரை தொடர்ந்து விற்பனை ஆகின்றது.

 மஹிந்திரா ஸ்கார்பியோ

கடும் போட்டியை சில மாதங்களாகவே ஸ்கார்பியோ சந்தித்து வருகின்றது. ஈக்கோஸ்போர்ட் மற்றும் டஸ்ட்டர் போன்ற கார்களின் வரவால் சற்று சரிவினை சந்தித்தாலும் தொடர்ந்து விற்பனையில் சிறப்பான வளர்ச்சியினை எட்டி வருகின்றது.

11 வருடங்களாக விற்பனையில் உள்ள ஸ்கார்பியோ இதுவரை இரண்டு முறை மட்டுமே பெரிதான மாற்றங்களை சந்தித்துள்ளது.

அடுத்த வருடத்தில் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ வெளிவரவுள்ளதை மஹிந்திரா உறுதி செய்துள்ளது.