ஸ்கோடா ஃபேபியா உற்பத்தியை நிறுத்துவதற்க்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேபியா ஹேட்ச்பேக் காரின் தொடர் விற்பனை சரிவினால் மிக பெரிய நட்டத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகின்றது. எனவே ஸ்கோடா இந்தியா நிறுவனம் ஃபேபியா உற்பத்தியை நிறுத்த உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஃபேபியா மிக அதிகப்படியான விலையின் காரணமாக இந்தியாவில் வரவேற்பினை பெற தவறியது. 2012-2013 நிதி ஆண்டில் வெறும் 3343 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. மேலும் கடந்த மாதம் வெறும் 115 கார்களை மட்டுமே விற்றுள்ளது.
ஃபேபியாவிற்க்கான பெரும்பாலான உதிரிபாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ப்படுவதனால் விலை அதிகமாக உள்ளது. குறைவான விற்பனையின் காரணமாக உற்பத்தியை நிறுத்தம் செய்ய ஸ்கோடா ஆட்டோ முடிவு செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் ஹோண்டா நிறுவனம் ஜாஸ் உற்பத்தியை நிறுத்தியது நினைவிருக்கலாம்.