ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் மற்றும் சூப்பர் லோ பைக்குகள் நிறுத்தம்

0

இந்திய ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஃபேட் பாய் ஸ்பெஷல் மற்றும் சூப்பர் லோ என இரண்டு பைக்குளை இந்திய சந்தையிலிருந்து நீக்கியுள்ளது. குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதனால் இந்த பைக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

Harley-Davidson-fatboy-special
ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் ஸ்பெஷல்

ஃபேட் பாய் ஸ்பெஷல் பைக்கில் 65 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 1690cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 132 Nm ஆகும் . இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. க்ரூஸர் ரகத்தில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் கொண்ட இந்த மாடல் நீக்கப்பட்டுள்ளது. ஃபேட் பாய் ஸ்பெஷல் பைக்கின் விலை ரூ.16.25 லட்சம் ஆகும்.

Google News

மற்றொரு மாடலான ஹார்லி டேவிட்சன் சூப்பர் லோ பைக்கில்  50 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 883cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 69 Nm ஆகும் . இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. க்ரூஸர் ரகத்தில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் கொண்ட இந்த மாடல் நீக்கப்பட்டுள்ளது. சூப்பர் லோ  பைக்கின் விலை ரூ.5.95 லட்சம் ஆகும்.

இந்த இரு பைக்குகளுக்கும் மாற்றாக புதிய மாடல் வருமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

Harley-Davidson-Superlow