ஹோண்டா சிபிஆர் 650எஃப் |
கடந்த ஒரு மாதத்தில் முதல் மாதம் உற்பத்தி செய்யப்பட 50 பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இந்த நிதி ஆண்டில் சுமார் 200 பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்னைத்துள்ளது.
குறிப்பிட்ட 13 டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யபடும் ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் முழுதும் அலங்கரிக்கப்பட்ட சக்திவாய்ந்த 86பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 649சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மேலும் கடந்த 2014ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த சிபிஆர் 500 ஆர் பைக்கை இந்திய சந்தைக்கு கொண்டு வரும் திட்டத்தை ஹோண்டா கைவிட்டுள்ளது.
மேலும் படிக்க ; ஹோண்டா CBR 650F பைக் முழுவிபரம்
சிபிஆர் 250 ஆர் மற்றும் சிபிஆர் 650எஃப் பைக்குகளுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இலகுஎடை கொண்ட சக்திவாய்ந்த சிபிஆர் 500 ஆர் பைக்கை நிராகரித்துள்ளது.
மேலும் படிக்க ; ஹோண்டாவின் புதிய 4 பைக்குகள் விரைவில்