கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா நவி மினி பைக் விற்பனை எண்ணிக்கை 60,000 எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.
நவி மினி பைக்
- மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரின் வடிவ தாத்பரியங்களை கொண்டு நவி ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டது.
- இந்தியாவின் ஹோண்டா இரு சக்கர வாகன பிரிவினால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாகும்.
- வருடத்திற்கு 25,000 என்கின்ற எண்ணிக்கையில் விற்பனை செய்யவதற்கே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஹோண்டா இந்தியா பிரிவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்டு முதன்முறையாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் வாயிலாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோ ஸ்கூட்டர் மாடலில் 7.8 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109.2cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் காப்புரிமை பெற பெற்ற ஹோண்டா ஈக்கோ டெக்னாலாஜி நுட்பம் பெற்ற என்ஜினாகும். இதில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்வதற்கு சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஹோண்டாவின் டூ வீலர் பிரிவின் தபுகாரா ஆலையில் தயாரிக்கப்படுகின்ற நவி மாடலுக்கு அமோக ஆதரவினை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்றத்தை தொடர்ந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருடத்திற்கு 25,000 என்ற இலக்கினை மாற்றி அமைத்து 50,000 என ஹோண்டா திட்டமிட்டிருந்தது.
தற்பொழுது 50,000 என்கின்ற எண்ணிக்கையை கடந்த 60,000 எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆரம்பத்தில் இந்திய சந்தைக்கு மட்டுமே திட்டமிடப்பட்ட நவி பைக் தற்பொழுது நோபால் ஆட்டோ சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டுகின்றது.
மேலும் படிக்கலாமே.. நவி பைக் செய்திகள் மற்றும் ஹோண்டா டூ வீலர் செய்திகள் படிக்கலாம்..