ஹோண்டா நவி 10,000 விற்பனை சாதனை

ஸ்கூட்டர் மற்றும் பைக் என இரண்டின் கலவையில் உருவாக்கப்பட்ட ஹோண்டா நவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து நவி ரூ. 39,500 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

honda-navi-standard-side

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 4 மாதங்களில் 10,000 என்ற விற்பனை இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ள நவி மோட்டார்சைக்கிள் 18 முதல் 24 வயதுள்ள வாடிக்கையாளர்களை மனதில் வைத்து சிறப்பான ரைடிங் அனுபவத்தினை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நவி பைக்கில் 7.8bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109.2cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆக்டிவா ஸ்கூடரரில் உள்ள அதே HET என்ஜினாகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.   நீளம் 1854மிமீ , அகலம் 748மிமீ மற்றும் உயரம் 1039மிமீ ஆகும். மிக இலகுகுவான எடை கொண்ட 101 கிலோ மட்டுமே கொண்டுள்ள நாவி பைக்கில் இருபக்கங்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறம் ஒற்றை சாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

[irp posts=”5901″ name=”ஹோண்டா நவி விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016″]

Honda NAVi photo gallery – Auto Expo 2016

[envira-gallery id=”5902″]