ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர் வருகையா ?

0

இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையின் பெரும்பகுதியை ஹோண்டா தன்வசம் வைத்துள்ள நிலையில் புதிய கிளாசிக் வடிவமைப்பிலான ஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Honda-Metropolitan-Scooter

Google News

இந்தியாவின் இருசக்கர வாகன பிரிவில் தொடர்ச்சியாக மாதந்திர விற்பனையில் 2 இலட்சம் ஸ்கூட்டர்கள் எண்ணிக்கையை தாண்டி விற்பனை செய்யப்பட்டுவரும் ஆக்டிவா வரிசை ஸ்கூட்டரை கொண்டு வவிமையான அடிதளத்தினை பெற்றுள்ளது. மேலும் டியோ , ஏவியேட்டர் போன்ற மாடல்களும் விற்பனையில் உள்ளது.

ஹோண்டா மெட்ரோபொலிட்டன்

ஹோண்டா மெட்ரோபொலிட்டன் என்ற பெயரில் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கூட்டர் மாடலே இந்தியாவில் காப்புரிமைக்காக விண்ணப்பிகப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 49சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே இதே ஸ்கூட்டரை இந்தியாவில் ஆக்டிவா மாடலில் உள்ள 110சிசி இஞ்ஜின் பொருத்தி விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

Honda-Metropolitan-patent-sketch

ஹீரோ மோட்டாகார்ப் காட்சிப்படுத்திய ஹீரோ லீப் பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்த மாடல் ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு கருத்தும் தெரிவிக்கப்படுகின்றது.

மிகச்சிறப்பான ரெட்ரோ ஸ்டைல் வடிவ தாத்பரியங்களை கொண்டு விளங்கும் மெட்ரோபொலிட்டன் விளங்குவதனால் வெஸ்பா , யமஹா பேசினோ போன்ற ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக பாரம்பரிய தோற்ற அமைப்பின் கொண்ட ஸ்கூட்டருக்கு வடிவ காப்புரிமைக்கு ஹோண்டா சமர்பித்துள்ளதாக மோட்டார்பீம் தகவல் வெளியிட்டுள்ளது.

source : motorbeam