ஹோண்டா CB ஹார்னட் 160R முன்பதிவு ஆரம்பம்

0
ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் பைக்கிற்க்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஹார்னட் 160R பைக் யூனிகார்ன் 160 பைக்கிற்க்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர்

ரெவ்ஃபெஸ்ட் வியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சிபி ஹார்னட் 160ஆர் பைக் யூனிகார்ன் 160 பைக்கினை விட கூடுதல் விலையில் சிறப்பான ஸ்டைலிங் தோற்றத்துடன் விளங்கும்.

பெரும்பாலான பாகங்கள் மற்றும் என்ஜின் போன்றவை சிபி யூனிகார்ன் 160 பைக்கிலிருந்தே பெறப்பட்டுள்ளது. புதிதாக வந்த சிபி ஷைன் எஸ்பி மாடலை போல  யூனிகார்ன் பைக்கை விட கூடுதலான விலையில் இருக்கும்.

14.5 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 14.61என்எம் டார்க் வழங்கும் 162.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஸ்போர்ட்டிவான தோற்றத்தில் வரவுள்ள ஹார்னெட் 160ஆர் பைக்கில் டிஜிட்டர் இன்ஸ்டூர்மென்ட் கன்சோல் , பெட்ரோல் டேங் கிளாடிங் , இரண்டு பிரிவுகளை கொண்னட கிராப் ரெயிலினை பெற்றிருக்கும். மேலும் ஆப்ஷனல் வேரியண்டில் சிபிஎஸ் பிரேக் இருக்கலாம்.

ஹோண்டா CB ஹார்னட் 160R பைக் டிசம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரலாம். தற்பொழுது ரூ.5000 செலுத்தி ஹோண்டா சிபி ஹார்னட் 160R  பைக்கிற்க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.84000 ஆன்ரோடு விலையில் வரலாம்.

Honda CB Hornet 160R bookings begin