ஹோண்டா CBR 150R , CBR 250R , CBR 300R இந்தியா வருகை ?

1 Min Read

2016 ஆம் ஆண்டின் புதிய ஹோண்டா CBR 150R , CBR 250R  மற்றும் புதிய  CBR 300R பைக்குகள் இந்திய வருமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ள நிலையில் இந்த மூன்று பைக்குகளின் புதிய மாடல்கள் இந்தியா வர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

honda-cbr150r-green

இந்தோனேசியாவில் சிபிஆர் 150ஆர் பைக் இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடலை இருமுறை புதுப்பிக்கப்பட்டு பல வசதிகளை பெற்று விளங்குகின்றது. ஆனால் இந்திய சிபிஆர் 150ஆர் எந்த மேம்பாடுகள் இல்லாமல் வண்ணங்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

சிபிஆர் 250ஆர் மாடலும் சிபிஆர் 150 ஆர் பைக் போல ஒருமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வண்ணங்கள் மட்டுமே மேம்படுத்தப்பட்டன. சிபிஆர் 300 ஆர் பைக் இந்தியா வருமா என பைக் பிரியர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

மாதம் 300 பைக்குகளுக்கு மேல் சராசரியாக விற்பனை ஆகி வருவதனால் தொடர்ந்து வண்ணங்களை மட்டுமே மாற்ற வருகின்றது. மிக வலுவான போட்டியாளர்கள் இல்லாத காரணத்தாலே இந்த நிலை தொடருகின்றது.

பைக்அட்வஸ் வெளியிட்டுள்ள செய்தியில் 2016 ஆம் ஆண்டில் இந்த மூன்று மாடல்களுமே இந்தியா வரவாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ளது. பைக் பிரியர்களுக்கு ஏமாற்றம்தான். பார்வைக்காக இந்தோனேசியாவில் விற்பனைக்கு வந்த CBR 150R படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

[envira-gallery id=”6365″]

 

TAGGED:
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.