ஹோண்டா CBR 650F பைக் எப்படி இருக்கும்

0
நாளை ஹோண்டா ரெவ்ஃபெஸ்ட் விழாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹோண்டா CBR 650F பைக்கில் எதிர்பார்க்கும் முக்கிய அம்சங்கள் என்ன ?  ஹோண்டா CBR 650F பைக்  விலை என்னவாக இருக்கலாம்.

ஹோண்டா CBR 650F

ரெவ்ஃபெஸ்ட் என்ற பெயரில் நடைபெறவுள்ள விழாவில் 8 நகரங்களில் ஒரே சமயத்தில் ஹோண்டா CBR 650F பைக் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட CBR 150R மற்றும் CBR 250R பைக்கும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1. தோற்றம்

மிக சிறப்பாக முன்பக்கம் முழுதும் அலங்கரிகப்பட்ட மாடலான சிபிஆர் 650எஃப் பைக்கின் தோற்றம் மிகவும் ஸ்போர்ட்டிவாக விளங்கும். ஸ்போர்ட்டிவ் முகப்பு விளக்குகள் பக்கவாட்டில் ஸ்டைலிங்கான தோற்றம் , பின்புறம் என ஓட்டுமொத்தமாக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா CBR 650F பைக்

2. என்ஜின்

86பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திரவ மூலம் குளிர்விக்கும் 4 சிலிண்டர் கொண்ட 649சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 63என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

மிக சிறப்பான ஆற்றல் மற்றும் சீரான எரிபொருளினை தெளிக்கும் புரோகிராம் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் அமைப்பு (PGM-Fi ; Programmed Fuel Injection System) உள்ளது.

3. சிறப்புகள்

முன்பக்கத்தில் 320மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தக்கூடிய இரட்டை சேனல் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பினை (ஏபிஎஸ்) பெற்றுள்ளது.

4. சஸ்பென்ஷன் மற்றும் டயர்

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும் பின்பக்கத்தில் 5 விதமான அட்ஜஸ்டபிள் ஆப்ஷன் கொண்ட மோனோசாக் அப்சரினை பெற்றுள்ளது. அலுமினிய ஆலாய் வீலை கொண்டுள்ளது. இதன் டயர் அளவுகள் 120/70ZR-17 முன் மற்றும் பின்புறத்தில் 180/55ZR-17 டயர் பொருத்தப்பட்டுள்ளது.

5. போட்டியாளர்கள்

கவாஸாகி நின்ஜா 650 , ட்ரையம்ஃப் ஸ்பீடு டிரிபிள் , ட்ரையம்ஃப் மானஸ்டர் ,  பெனெல்லி 600i மற்றும் பெனெல்லி 600GT போன்றவை ஹோண்டா சிபிஆர் 650F பைக்கிற்க்கு போட்டியாக விளங்கும்

ஹோண்டா CBR 650F பைக்

6. விலை

ஹோண்டா CBR 650F பைக்கின் விலை ரூ.8 முதல் 9.50 லட்சத்திற்க்குள் இருக்கலாம்
நாட்டில் உள்ள 12 முன்னனி ஹோண்டா எலைட் விங் சேவைமைங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் வாசிக்க ; சென்னை ஹோண்டா CBR 650F பைக் விற்பனை மையம்

Upcoming Honda CBR 650F Bike details