Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் பைக் வருகை விபரம்

by automobiletamilan
மே 11, 2017
in செய்திகள்

இந்திய இருசக்கர வாகன சந்தையில் பிரிமியம் ரக மோட்டார் சைக்கிள் விற்பனை அபரிதமான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் ஹோண்டா டூவீலர் பிரிவு புதிய ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா XRE300 அட்வென்ச்சர்

  • 4 புதிய மாடல்களை இந்த நிதி ஆண்டில் ஹோண்டா இந்தியா களமிறக்க உள்ளது.
  • பிரேசில் சந்தையில் விற்பனையில் உள்ள 300சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாகும்.
  • ரூபாய் 2 லட்சம் விலையில் ஹோண்டா XRE300 விற்பனைக்கு வரலாம்.

இந்திய சந்தையில் 4 புதிய மாடல்களை நடப்பு நிதி ஆண்டில் ஹோண்டா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் பிரிமியம் அட்வென்ச்சர் மாடலான 1000சிசி கொண்ட ஆபிரிக்கா ட்வீன் மாடலை தொடர்ந்து மற்றொரு மாடலாக தொடக்கநிலை அட்வென்ச்சர் மாடல் சந்தையான 300சிசி பிரிவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கார்பிளாக் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோண்டாவின் பிரேசில் உள்பட சில சந்தைகளில் விற்பனையில் ஹோண்டா எக்ஸ்ஆர்இ300 அட்வென்ச்சர் மாடலில் 291.6 சிசி சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25.4 ஹெச்பி பவருடன், 27.6 என்எம் டார்க் வழங்கும். இதில் ஹோண்டாவின் PGM-FI நுட்பத்தை பெற்றதாக விளங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கொண்டதாக விளங்கும் எக்ஸ்ஆர்இ 300 பைக்கில் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்படலாம்.

சமீபத்தில் ஹோண்டா மானசேர் ஆலையில் அட்வென்ச்சர் ரக ஆப்ரிக்கா ட்வீன் சோதனை ஓட்ட உற்பத்தி தொடங்கியுள்ளதை தொடர்ந்து இந்த மாடல் ஜூன் அல்லது ஜூலையில் விற்பனைக்கு வரக்கூடும் என்பதனால் இதனை தொடர்ந்தே குறைந்த சிசி கொண்ட எக்ஸ்ஆர்இ300 பைக் மாடல் விற்பனைக்கு அக்டோபர் மாதம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இது தொடர்பாக நமது மோட்டார் டாக்கீஸ் பைக் பிரிவில் பேசலாம் வாங்க

Tags: Honda BikeXRE300
Previous Post

இசுசூ MU-X எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது

Next Post

ரூ. 60000 விலையில் சிறந்த 5 பைக்குகள் – 2017

Next Post

ரூ. 60000 விலையில் சிறந்த 5 பைக்குகள் - 2017

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version