மாருதி சுஸூகியின் மிக பிரபலாமான ஸ்விப்ட் டிசையர் மற்றும் எர்டிகா கார்கள் இந்தியா டிசைன் மார்க் விருதினை வென்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மாருதி வென்றுள்ளது. கடந்த ஆண்டு மாருதி ஸ்விப்ட் மற்றும் வேகன்ஆர் வென்றது.

இந்தியாவில் அதிக விற்பனையாகும் செடான் கார்களில் மாருதி ஸ்விப்ட் டிசையர் முதன்மை வகிக்கின்றது. கடந்த நிதி ஆண்டில் (2012-2013) 1,69,571 வாகனங்களை விற்றுள்ளது. மாருதி எர்டிகா எம்பிவி காரும் மிக அதிகமாக விற்பனையாகும் காராகும்.

Maruti Swift Dzire regal

இந்த விருதிற்க்கான தேர்வுமுறை ஆனது வடிவமைப்பு, நிலைப்பு தன்மை, தரம்,செயல்பாடு, தோற்றம், சிறப்பான உருவாக்கம் போன்ற காரானிகளை மையமாக வைத்து இந்தியா டிசைன் கவுன்சில் வழங்குகின்றது. இந்தியா டிசைன் மார்க் விருது இந்தியாவின் டிசைன் கவுன்சில் மற்றும் ஜப்பான் இன்ஷடியூட் ஆஃப் டிசைன் பிரோமோஷன் கூட்டனியில் வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாருதி எக்ஸ்கூட்டிவ் டிசைனர் சி.வி ராமன் கூறியது…

இந்த விருதானது மாருதி சுசுகி கார்கள் மிக உயர்வான வடிவமைப்பில் உள்ளதை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்றுள்ளது தொடர்ந்து டிசைனிங்கில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற உணர்வினை தருகின்றது. இது எங்கள் வடிவமைப்பின்ன் உயர்வினை உறுதி செய்கின்றது.