சென்னையில் டீசல் கார் தடை வருகின்றதா ?

0

டெல்லி மற்றும் கேரளா மாநிலத்திலும் டீசல் கார் விற்பனை செய்ய மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கு தடை உள்ளது போல சென்னை மாநகரிலும் டீசல் காருக்கு தடை வர வாய்ப்புகள் உள்ளது.

toyota-innova (2)

Google News

தற்பொழுது தேசிய பசுமை தீர்ப்பாயம் 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட டீசல் என்ஜின்களை விற்பனை செய்ய டெல்லி மற்றும் தலைநகர் பகுதி மற்றும் கேரளா மாநிலத்திலும்  தடை விதித்துள்ளது. மேலும் சென்னை , பெங்களூரு , மும்பை , கோல்கத்தா , பாட்னா , ஜலந்தர் மற்றும் ஹைத்திராபாத்  போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் அடுத்த சில வாரங்களில் தடைவிதிக்க உள்ளதாக தெரிகின்றது.

மே 30, 2016 யில் நடந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் மாசு உமிழ்வு அளவு எவ்வளவு என்ற விபரங்களை தமிழ்நாடு , மஹாராஷ்ட்ரா , மேற்கு வங்காளம் , தெலுங்கானா , பஞ்சாப் , உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்  போன்ற மாநிலங்களின் விபரங்களை மே 31 ,2016க்குள் சமர்பிக்க வேண்டுமென்றும் கூடுதலாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விபரங்கள தனித்தனியாகவும் மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட இரு நகரங்களை முன்னிலை படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் மூன்று வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூன் 11 , 2016 யில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதால் அன்றைய தேதியில் தடை குறித்த அறிவிப்பு வெளிவரலாம்.

கார் தயாரிப்பாளர்களான டொயோட்டா, மஹிந்திரா ,  டாடா , பென்ஸ் லேண்ட் ரோவர் என பல நிறுவனங்கள் டீசல் கார் தடையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தற்காலிக தடை என்றாலும் கூடுதல் நகரங்களில் தடை செய்தால் கார் உற்பத்தி சரிய வாய்ப்புள்ளது.

சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், டீசல் கார் தடை குறித்து பேசுகையில், ‘‘நீதிமன்றங்களின் சில உத்தரவுகள் அர்த்தமற்றதாகவும், அறிவியல்பூர்வமாக இல்லாமலும் உள்ளன’’ என்றார்.

மேலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி டோக்கியாவில் கூறுகையில் இந்தியாவின் வாகன உற்பத்தி துறை மிகச்சிறப்பான இடத்தில் உள்ளது. சில  தற்காலிகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் காரணமாக, மிகப்பெரிய சந்தையாக உள்ள இந்தியாவில் சுசூகி போன்ற முன்னணி  நிறுவனங்களின் தொழிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’.

டீசல் என்ஜின்  மாசு உமிழ்வு தரத்தினை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மேம்படுத்தவதை தவிர்த்து தடை என்பது சிறப்பான நடவடிக்கையாக இருக்காது என்பதே ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.