Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

புதிய பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார் அறிமுகம்

By MR.Durai
Last updated: 4,June 2015
Share
SHARE
இரண்டாம் தலைமுறை  பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  புதிய பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி காரில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

2016 பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார்

புதிய  பிஎம்டபிள்யூ X1 காரில் முந்தைய மாடலின் பின்புற ரியர் வீல் டிரைவிற்க்கு பதிலாக ஃபிரென்ட் வீல் டிரைவ்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலான இடவசதியை தரப்பட்டுள்ளது. வடிவம் மற்றும் உட்புறத்திலும் சில முக்கிய மாற்றங்களை புதிய X1 பெற்றுள்ளது.

வடிவமைப்பு

முகப்பு தோற்றம் முந்தைய மாடலை விட முழுமையாக மாற்றப்பட்ட சற்று பெரிய எஸ்யூவி போன்ற அமைப்பில் இந்த சிறய எஸ்யூவி விளங்குகின்றது.  பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ பனி விளக்குகள் புதிய எல்இடி பகல் நேர விளக்கு மற்றும் எல்இடி முகப்பு விளக்குகளை கொண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி

பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி

பக்கவாட்டு தோற்றத்தில் புதிய கருப்பு வண்ண கிளாடிங் மற்றும் புரொஃபைல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பின்புற பம்பர் டெயில் கேட் கதவுகள் , டெயில் விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ X1 4431மிமீ நீளமும் , 1821மிமீ அகலமும் மற்றும் 1598மிமீ உயரமும் கொண்டுள்ளது. முந்தைய மாடலை விட 36 மிமீ நீளம் குறைவாகவும் , 21மிமீ அகலம் மற்றும் 53மிமீ உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல்பேஸ் 90மிமீ  ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

BMW X1 SUV REAR

உட்புறம்

டெஸ்போர்டு மற்றும் இருக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாபினை கொண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ X1 உட்புறம்

பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார்

பிஎம்டபிள்யூ X1 இருக்கை

என்ஜின்

புதிய பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார் முந்தைய மாடலில் இருந்து பெரிதான ஒரு மாற்றத்தினை கண்டுள்ளது. அது ரியர் வீல் டிரைவ்க்கு பதிலாக ஃபிரென்ட் வீல் டிரைவ்க்கு மாறியுள்ளது. இந்த மாற்றம் பிஎம்டபிள்யூ மினி பிராண்டின் UKL தளத்தின் மூலம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார்

4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இரண்டு விதமான ஆற்றலை தரும். அவை 189பிஎச்பி மற்றும் 228பிஎச்பி ஆகும்.

2.0 லிட்டர் ட்ர்போடீசல் என்ஜின் மூன்று விதமான ஆற்றலை வெளிப்படுத்தும். அவை 147பிஎச்பி , 187பிஎச்பிமற்றும் 228பிஎச்பி ஆகும்.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் 8 வேக தானியங்கி மற்றும் 6 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

பிஎம்டபிள்யூ X1 என்ஜின்

பெட்ரோல் வேரியண்ட் விபரம்

sDrive20i FWD  மற்றும் xDrive20i AWD என இரண்டு வேரியண்டிலும் 189 பிஎச்பி ஆற்றல் மற்றும் முறுக்குவிசை 280 என்எம் ஆகும்.

xDrive25i AWD வேரயண்டில் 228பிஎச்பி ஆற்றல் மற்றும் முறுக்குவிசை 350என்எம் ஆகும்.

டீசல் வேரியண்ட் விபரம்

sDrive18d FWD வேரிண்டில் 147பிஎச்பி ஆற்றல் மற்றும் முறுக்குவிசை 330என்எம் ஆகும்.

xDrive20d AWD வேரியண்டில் 187பிஎச்பி ஆற்றல் மற்றும் முறுக்குவிசை 400என்எம் ஆகும்

xDrive25d AWD வேரியண்டில் 228பிஎச்பி ஆற்றல் மற்றும் முறுக்குவிசை 450என்எம் ஆகும்.

புதிய பிஎம்டபிள்யூ இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார்

2016 BMW X1 SUV unveiled. X1 goes sale this year end.

upcoming tvs bikes and scooters
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
TAGGED:BMWSUV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ்
Honda Bikes
2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
சுசூகி ஜிக்ஸர்
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
tvs raider 125 Wolverine
TVS
டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms