லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் காருக்கு மாற்றாக வந்த லம்போர்கினி ஹூராகேன் மிக சிறப்பான மாடலாக விளங்கி வருகின்றது. தற்பொழுது லம்போர்கினி ஹூராகேன் 4 விதமான வேரியண்டில் விற்பனையில் உள்ளது.
லம்போர்கினி ஹூராகேன் மாடல் கல்லார்டோ போல அல்லாமல் அடுத்தடுத்து புதிதாக வாழ்கை முறையை உருவாக்கி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹூராகேன் பேஸ் மாடலை கொண்டு புதிதாக வேரியண்ட்கள் வரவுள்ளது.
லம்போர்கினி ஹூராகேன் வேரியண்ட்
- ஹூராகேன் LP 580-2 (ரியர் வீல் டிரைவ்)
 - ஹூராகேன் LP 610-4 ஸ்பைட்ர்
 - ஹூராகேன் LP 610-4
 - ஹூராகேன் LP 620-2 சூப்பர் ட்ரோஃபியோ ( ரேசிங் மாடல் )
 
சில வாரங்களுக்கு முன்னதாக ரியர் வீல் டிரைவ் கொண்ட லம்போர்கினி ஹூராகேன் LP 580-2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த கட்டமாக புதிய வேரியண்டாக சூப்பர் வெலோஸ் அல்லது சூப்பர் லெக்கரா என்ற பெயரினை கொண்டாதாக இருக்கலாம் என தெரிகின்றது.
லம்போர்கினி ஹூராகேன் வரிசையில் 5 விதமான முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை
- வாழ்க்கை முறை (lifestyle)
 - இயக்குவதனை இனியதாக்க ( fun to drive)
 - செயல்திறன் ( performance )
 - உச்சகட்ட செயல் திறன் ( high performance )
 - ரேசிங் (race)
 
இவை ஐந்து அம்சங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என லம்போர்கினி தலைமை செயல் அதிகாரி ஸ்டீஃபன் விங்கில்மென் தெரிவித்துள்ளார்.
