புதிய பிரிமியம் எஸ்யூவி கார்கள் – 2016

0

2016 ஆம் ஆண்டில் சந்தையில் நுழைவுள்ள புதிய பிரிமியம் எஸ்யூவி கார்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் ரூ. 25 லட்சத்திற்கு மேற்பட்ட விலையில் வரவுள்ள எஸ்யூவி கார்கள் மட்டுமே இந்த செய்தி தொகுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Toyota Fortuner revealed

Google News
  1. டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் புத்தம் புதிய மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாடல் வரவுள்ளது. ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் புதிய 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் என இரண்டு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் வரவுள்ளது. மேலும் பல நவீன அம்சங்களை டொயோட்டா ஃபார்ச்சூனர் பெற்றிருக்கும்.

வருகை : நவம்பர் 2016

விலை : ரூ.26 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : பஜெரோ ஸ்போர்ட் , ரெக்ஸ்டான் , சான்டா ஃபீ , ட்ரெயில்பிளேசர் , எண்டெவர்

[nextpage title=”Next Page”]

2. ஃபோர்டு எண்டெவர்

மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி தற்பொழுது இந்தியாவில் தீவர சோதனை ஓட்டத்தில் உள்ளது. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் விற்பனைக்கு வரலாம். 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என்ஜின் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன்களுடன் வரவுள்ளது.

Ford Endeavour SUV 1

வருகை : நவம்பர் 2016

விலை : ரூ.25 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : ஃபார்ச்சூனர் , பஜெரோ ஸ்போர்ட் , ரெக்ஸ்டான் , சான்டா ஃபீ , ட்ரெயில்பிளேசர்

[nextpage title=”Next Page”]

3. ஹோண்டா சிஆர் வி

ஹோண்டா சிஆர் வி எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

2016-honda-cr-v-suv

வருகை : ஜூலை 2016

விலை : ரூ.23 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : சான்டா ஃபீ , எட்டி

[nextpage title=”Next Page”]

4. சாங்யாங் ரெக்ஸ்டான்

மஹிந்திரா நிறுவனத்தின் சாங்யாங் பிரிவின் ரெக்ஸ்டான் மாடலின் தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை கொண்ட புதிய ரெக்ஸ்டான் எஸ்யூவி கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

Ssangyong Rexton

வருகை : மார்ச் 2016

விலை : ரூ.24 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : பஜெரோ ஸ்போர்ட்  ஃபார்ச்சூனர், சான்டா ஃபீ , ட்ரெயில்பிளேசர் , எண்டெவர்

[nextpage title=”Next Page”]

5. மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்

புதிய தலைமுறை மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி கார் மிக சிறப்பான வசதிகளுடன் கூடுதல் அம்சங்களை கொண்ட மாடலாக 2.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

2016-Mitsubishi-Pajero-Sport-fr

வருகை : மார்ச் 2016

விலை : ரூ.24 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : ஃபார்ச்சூனர் , ரெக்ஸ்டான் , சான்டா ஃபீ , ட்ரெயில்பிளேசர் , எண்டெவர்

[nextpage title=”Next Page”]

6. ஜீப் ரேங்கலர்

ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் குழுமத்தின் ஜீப் பிராண்டு இந்தியாவில் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் விற்பனைக்கு வரவுள்ளது. ஜீப் ரேங்கலர் எஸ்யூவி கார் சிறப்பான ஆஃப் ரோடர் காராக விளங்கும்.

jeep-wrangler

வருகை : பிப்ரவரி 2016

விலை : ரூ.28 லட்சத்தில் தொடங்கும்

மேலும் படிக்க ; காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்கள் 2016