2016 ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி அறிமுகம்

0
லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட 2016 எவோக் விபரங்கள் வெளியாகியுள்ளது. புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.

ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி

 வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் உலகின் பார்வைக்கு வரவுள்ள நிலையில் சில முக்கிய விபரங்களை லேண்ட்ரோவர் வெளியிட்டுள்ளது.

வெளிதோற்றத்தில் சில முக்கிய மாற்றங்களை பெற்றுள்ளது. அவை முகப்பு பம்பர் புது வடிவத்தில் மாறினாலும் பாரம்பரியமான தோற்றத்தினை இழக்காமால் புதிய பொலிவினை பெற்றுள்ளது. அடாப்டிவ் எல்இடி முகப்பு விளக்குகள் , பகல் நேர விளக்குகள் , எல்இடி நிறுத்த விளக்குகள், என அனைத்தும் எல்இடி விளக்குகளாக மாறியுள்ளது.

Google News
லேண்ட்ரோவர் எவோக்

பக்கவாட்டில் பெரிதான மாற்றங்கள் இல்லை என்றாலும் கதவுகளில் சிறிய மாற்றங்களை பெற்றுள்ளது. புதிய ஆலாய் வீல்களை பெற்றுள்ளது.

2016 ரேஞ்ச்ரோவர் எவோக்

பின்புறத்தில் உள்ள டெயில்கேட்டில் புதிய வசதிகள் புகுத்தப்பட்டுள்ளது. அதாவது பின்புற கதவுகளின் அடியில் கால்கள் சென்றால் தானாகவே திறந்து கொள்ளும்.

ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யுவி

2016 ரேஞ்ச்ரோவர் எவோக்

உட்புறத்தில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 இஞ்ச் தொடுதிரை பயன்படுத்தியுள்ளனர். மேலும் புதிய இருக்கைகள், டோர் பேனல்கள் , புதிய வண்ணங்கள் மற்றும் புதிய அப்ல்சரி போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

Range%2BRover%2BEvoque%2Binterior%2Bview

ஜேஎல்ஆரின் புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இன்ஜெனியம் என்ஜின் 180 அல்லது 150 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினாக இருக்கும். டீசல் மாடலில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

மேலும் 240எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும். 9 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவி

பல நவீன பாதுகாப்பு அம்சங்களை எவோக் எஸ்யூவி காரில் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக லேன்-அசிஸ்ட், அவசரகால தானியங்கி பிரேக் அமைப்பு, தூங்கினால் எச்சரிக்கும் கருவி போன்றவை குறிப்பிடதக்க அம்சங்களாகும்.

ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி