2017 டொயோட்டா கரோல்லா அல்டிஸ் அறிமுகம்

0

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 டொயோட்டா கரோல்லா அல்டிஸ் கார் ரஷ்யாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கரோல்லா செடான் காரின் தோற்ற அமைப்பில் சில மாற்றங்கள் மட்டும் உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்டுள்ளது.

2017 Toyota corolla altis front

Google News

 

இந்த வருடத்தின் இறுதியில் ரஷ்யாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கரோல்லா கார் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது. விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது.

கரோல்லா அல்டிஸ் தோற்றம்

புதிய கரோல்லா காரின் முகப்பு தோற்ற அமைப்பு நேர்த்தியாக விளங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டு எல்இடி முகப்பு விளக்குடன் இணைந்த எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளை பெற்று விளங்குகின்றது. மேலும் ஒற்றை ஸ்லாட் கொண்ட முன்பக்க க்ரோம் கிரில் , பம்பரின் வடிவம் மற்றும் பனிவிளக்குகள் வட்ட வடிவத்துக்கு மாறியுள்ளது.

2017 Toyota coralla altis

 

பக்கவாட்டில் புதிய டிசைனில் அமைந்துள்ள அலாய் வீல் , பின்புற பம்பர் புதுப்பிக்கப்பட்டு எல்இடி டெயில் விளக்கு மற்றும் க்ரோம் கார்னிஷ் அமைந்துள்ளது.

இன்டிரியரியரில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் டேஸ்போர்டு பிளாஸ்டிக் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சாஃபட்வேர் பெற்றுள்ளது.

ரஷ்யா சந்தையில் லேன் அலர்ட் , தானியங்கி ஹைபீம் லைட் , மோதலை தடுக்கும் சிஸ்டம் மற்றும் ரேடார் பேஸ்டு டெக்னாலஜி உதவியுடன் இருக்கை பட்டை முன்னெச்சரிக்கை இறுக்கம் மற்றும் பீரி பிரேக் சார்ஜஸ் போன்ற வசதிகளை பெற்றுள்ளது.

என்ஜின் பற்றி எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. முந்தைய 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்களிலே தொடரும் மேலும் ஆற்றலில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.

2017 Toyota coralla altis dashboard

2017 Toyota corolla altis rear

2017 Toyota corolla altis side