2017 முதல் டாடா கார்களின் விலை உயர்கின்றது

வருகின்ற ஜனவரி முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவில் விற்பனையில் உள்ள அனைத்து கார் மாடல்களின் விலையும் அதிகபட்சமாக ரூ. 25,000 வரை உயர்த்தப்பட உள்ளது.இதில் டாடா டியாகோ காரும் அடங்கும்.

டாடா நிறுவனத்துக்கு புதிய உற்சாகத்தை வழங்கி வரும் டியாகோ கார் விற்பனைக்கு வந்தது முதல் இருதடவை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மீண்டும் விலை உயர்வினை சந்திக்க உள்ளது.  டாடா நிறுவனம் டியாகோ , போல்ட் , ஜெஸ்ட் , நானோ , இண்டிகா , சுமோ , ஸெனான் எக்ஸ்டி , சஃபாரி ஸ்டோரம் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. ரூ.5000 முதல் ரூ.25,000 வரை மாடல்களை பொருத்து விலை உயர்வு இருக்கலாம்.

விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள டாடா மோட்டார்சின் பயணிகள் பிரிவு தலைவர் கூறுகையில் விலை உயர்ந்து வரும் ஸ்டீல் , அலுமினியம்  ரப்பர் மற்றும் காப்பர் போன்ற மூலப்பொருட்களால் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதனை ஈடுகட்டும் நோக்கிலே இந்த விலை உயர்வினை அமல்படுத்த வேண்டியது கட்டாயமாகின்றது என கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் ஹெக்ஸா காரினை ஜனவரி 18ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.அதனை தொடர்ந்து கைட் 5 செடான் , டியாகோ ஏஎம்டி , டியாகோ ஸ்போர்ட் மற்றும் நெக்ஸான் போன்ற மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் டொயோட்டா , ரெனால்ட் போன்ற நிறுவனங்களும் விலை உயர்வினை அறிவித்துள்ள நிலையில் டாடாவும் இணைந்துள்ளதால் மேலும் பல நிறுவனங்கள் விரைவில் விலை உயர்வினை அறிவிக்க உள்ளது.

 

Recommended For You