2017 மாருதி டிசையர் காருக்கு முன்பதிவு ஆரம்பம்

0

வருகின்ற மே 16ந் தேதி மூன்றாவது தலைமுறை மாருதி டிசையர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் தற்பொழுது ரூ.11,000 செலுத்தி டிசையர் செடான் காரை மாருதி டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யலாம்.

new maruti dzire

Google News

புதிய மாருதி டிசையர்

  • ரூபாய் 11,000 செலுத்தி புதிய மாருதி சுசுகி டிசையர் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும்.
  • விற்பனையில் உள்ள மாடலை விட ரூபாய் 50,000 வரை விலை கூடுதலாக அமையலாம்.

2017 Maruti Suzuki Dzire side

ஐந்தாவது தலைமுறை ஹார்ட்டெக்ட் பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்ட பலேனோ மற்றும் புதிய ஸ்விஃப்ட் காரை தொடர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள புதிய டிசையர் செடான் காரின் நீளம் 3,995 மிமீ, அகலம் 1,735 மிமீ மற்றும் உயரம் 1,515 மிமீ , மற்றும் இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 163 மிமீ ஆகும். விற்பனையில் உள்ள இரண்டாவது தலைமுறை காரை விட 105 கிலோ வரை எடை குறைவானதாக வந்துள்ளது.

2017 Maruti Suzuki Dzire dashboard 1

டிசையர் காரில் 85 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 74 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை இடம் பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த இல்லாத நிலையில் டீசல் என்ஜின் மாடலில் கூடுதலாக சியாஸ் காரில் இடம்பெற்றுள்ள எஸ்ஹெச்விஎஸ் மைல்டு ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனுடன் வந்துள்ளது.

இந்த மாடலில் அகலாமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளுடன் பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.

வேரியன்ட் விபரம்

மாருதி டிசையர் பெட்ரோல்
Lxi (MT only)
Vxi (MT and AMT)
Zxi (MT and AMT)
Zxi+ (MT and AMT)

மாருதி டிசையர் டீசல்
Ldi (MT only)
Vdi (MT and AMT)
Zdi (MT and AMT)
Zdi+ (MT and AMT)

2017 Maruti Suzuki Dzire rear qr view

வருகை மற்றும் விலை

மே 16ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மாருதி டிசையர் காரினை மாருதியின் டீலர்கள் வாயிலாக ரூபாய் 11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 5.45 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பர்க்கப்படுகின்றது.

முழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்