Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

11 நாட்கள் 33,000 முன்பதிவுகள் மாருதி டிஸையர் கார் அட்டகாசம்..!

by automobiletamilan
மே 17, 2017
in செய்திகள்

இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் செடான் ரகத்தில் முன்னணி மாடலாக விளங்கும் டிசையரின் புதிய தலைமுறை மாருதி டிஸையர் காருக்கு மே 5ந் தேதி முதல் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 11 நாட்களில் 33,000 முன்பதிவுகளை பெறுள்ளது.

மாருதி டிஸையர் கார்

மாருதி நிறுவனத்தின் டிஸையர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் பல்வேறு மாற்றங்களை பெற்று கூடுதலான வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் கூடுதலான மைலேஜ் தரும் வகையிலான அமைப்பை பெற்று விளங்குகின்றது.

கடந்த மே 5 ஆம் தேதி தொடங்கி முன்பதிவில் விற்பனைக்கு வந்த நேற்றைய தேதியுடன் கடந்த 11 நாட்களில் 33,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை மாருதி டிசையர் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடதக்க அம்சமாக பெட்ரோல் கார்களுக்கு சராசரியாக 60 சதவிகித அளவிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிசையர் கார் vs போட்டியாளர்கள் பற்றி படிக்க

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

மேலும் படிங்க –> மாருதி டிசையர் மைலேஜ் விபரம் இங்கே..!

டிசையர் விலை பட்டியல்
வேரியன்ட் பெட்ரோல் டீசல்
LXi ரூ.5.45,000 ரூ.6,45,000
VXi ரூ.6,29,000 ரூ.7,29,000
ZXi ரூ.7,05,000 ரூ.8,05,000
ZXi+ ரூ.7,94,000  ரூ.8,94,000
VXi AMT ரூ.6,76,000 ரூ.7,76,000
ZXi AMT ரூ.7,52,000 ரூ.8,52,000
ZXi+ AMT ரூ.8,41,000 ரூ.9,41,000

எக்ஸ்-ஷோரூம் டெல்லி

முழுமையான பட தொகுப்பை காண மோட்டார் டாக்கீஸ் – டிசையர்

Tags: DzireMaruti Suzukiடிஸையர்
Previous Post

யமஹா ஃபேஸர் 250 பைக்கில் ஏபிஎஸ் வரலாம்..!

Next Post

இந்தியாவிருந்து வெளியேறும் ஜிஎம் செவர்லே ..!

Next Post

இந்தியாவிருந்து வெளியேறும் ஜிஎம் செவர்லே ..!

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version