32 கிமீ மைலேஜ் தரும் சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் இந்தியா வருமா ?

இந்தியாவில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற மாடல்களில் ஒன்றான சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடிய எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் ஹைபிரிட்

இந்த வருடத்தின் தொடக்க மாதங்களில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் கூடுதலாக ஹைபிரிட் ஆப்ஷன் பெற்ற மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காரில் இடம்பெற்றுள்ள அதே பெட்ரோல் 1.2 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனுடன் கூடுதலாக 10 கிலோ வாட் திறனை வெளிப்படுத்தும் மின்சார மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டின் ஒட்டுமொத்த ஆற்றல்  89 bhp வரை வெளிப்படுத்துகின்றது. இதில் சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அதிக திறன் தேவைப்படாத நேரங்கள், குறைந்த வேகம் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்கும்போது பெட்ரோல் எஞ்சின் அனைந்துவிட்டு மின்சார மோட்டாரில் மட்டுமே வாகனம் இயங்கும். வேகத்தை அதிகரிக்கும்போது தானாகவே மின்சார மோட்டார் செயலிழந்து பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே பயணிக்கும். ஜப்பானிய விதிமுறைகளின் அடிப்படையில் மைலேஜ் லிட்டருக்கு 32 கிமீ வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காரின் மொத்த எடையை 1000 கிலோ கிராமுக்குள் கொண்டு வந்துள்ள காரணத்தால் இந்த மாடலுக்கு ஜப்பானில் வரிச்சலுகை கிடைக்கும்.

சாதாரன ஸ்விஃப்ட் காருக்கும் ஹைபிரிட் மாடலுக்கும் தோற்றம் வசதிகள் போன்றவற்றில் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஹைபிரிட் பேட்ஜை மட்டுமே பெற்றுள்ளது.

இந்தியா வருமா ?

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் கார் இந்திய சந்தைக்கு வரும் வாய்ப்புகள் மிக குறைவே இந்தியாவில் சாதாரன ஸ்விஃப்ட் மாடலுக்கு 29 சதவிகித வரி வதிக்கப்படும் ஆனால் ஹைபிரிட் மாடலுக்கு 43 சதவிகித வரி என்பதனால் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.

 

 

Recommended For You