பிஎஸ்-6 இன்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டூரிங் ரக புதிய 2021 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக்கின் விலை ரூபாய் 1.13 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் இன்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
முந்தைய மாடலில் பெற்றுள்ள அதே வசதிகளை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்ஜின் பிஎஸ்-6 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பிஎஸ் 6 என்ஜின் இப்போது ஆயில் கூல்டு எக்ஸ்பல்ஸ் 200 இப்போது அதிகபட்சமாக 8,500rpm-ல் 17.8 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 16.45 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
தோற்ற அமைப்பு வசதிகளில் எந்த மாற்றமும் வழங்கப்படவில்லை. இந்த பைக்கில் கோல்டு, பிளாக் மற்றும் ரெட் என மூன்று நிறங்கள் உள்ளது. முன்புறத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக் உடன் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மோனோஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ வரை பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ கொண்டிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட், ப்ளூடூத் ஆதரவை பெற்ற எல்சிடி கிளஸ்ட்டர் கொண்டதாகவும், நேவிகேஷன் ஆதரவுடன் வந்துள்ளது.
2021 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி விலை ரூ.1,12,800