Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.?

by automobiletamilan
April 5, 2021
in செய்திகள்

கிரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட அல்கசாரில் பெரும்பாலான உதிரிபாகங்கள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன் கிரெட்டா காரிலிருந்து பயன்படுத்திக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள அல்கசார் எஸ்யூவி காரின் டீசர் முன்பே வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது “Castle theme”  என்ற பெயரில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டும் முழுமையாக முக்காடு போட்ட நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அல்கசார் டிசைன் அம்சங்கள்

கிரெட்டாவை பின்னணியாக கொண்ட அல்கசாரில் தோற்ற மாறுபாடுகளில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் பம்பர், முன்புற கிரில் அமைப்பில் ஹூண்டாய் மேற்கொண்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் பெரும்பாலும் கிரெட்டா கிரில் உள்ளதை போன்றே கதவுகள், பேனல்கள் பானெட் டிசைன் அமைந்துள்ளது. அலாய் வீல் புதிய டிசைனில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

சி-பில்லர் பகுதியில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஓவர் ஹேங்க் பகுதியில் கிரெட்டாவை விட நீளமாகவும், மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பதற்கான இடம் தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கும்.

பின்புற டெயில் அமைப்பில் பெரும்பகுதி கிரெட்டா காரிலிருந்து அல்கசார் காரின் டெயில் விளக்குகள், நெம்பர் பிளேட் இடம், க்ரோம் ஸ்லாட் ஆகியவை மாற்றப்பட்டிருக்கலாம்.

இன்ஜின் ஆப்ஷன்

சிறிய கிரெட்டா எஸ்யூவி காரில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷனை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் உள்ள நிலையில்,  1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 140hp பவரை வெளிப்படுத்தும், டூயல் கிளட்ச் ஆட்டோ மற்றும் மேனுவல், 115 ஹெச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.

போட்டியாளர்கள்

தற்போது இந்திய சந்தையில் கிடைக்கின்ற எம்ஜி ஹெக்டர் பிளஸ், புதிய டாடா சஃபாரி, மற்றும் வரவிருக்கும் புதிய எக்ஸ்யூவி500 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

 

Previous Post

ஏப்ரிலியா SXR 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய பியாஜியோ

Next Post

ரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது

Next Post

ரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version