3000 பெனெல்லி பைக்குகள் விற்பனை சாதனை

கடந்த 15 மாதங்களில் பிரிமியம் ரக சந்தையில் டிஎஸ்கே – பெனெல்லி நிறுவனம் மிக விரைவாக 3000 பெனெல்லி பைக்குகள் விற்பனை செய்து புதிய சாதனையை எட்டியுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக இத்தாலியின் பெனெல்லி பைக்குகள் பிரபலமாகி உள்ளது.

benelli-TNT-25

இந்தியன் சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் மிக சவாலான விலையில் மார்ச் 2015யில் 5 மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் களமிறங்கிய பெனெல்லி நிறுவனம் 9 டீலர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் 17 டீலர்களை பெற்றுள்ள டிஎஸ்கே-பெனல்லி கூடுதலாக அடுத்த சில மாதங்களில் மேலும் 15 புதிய டீலர்களை திறக்கும் நோக்கில் உள்ளது.

மிக சிறப்பான மாடலாக விளங்கும் TNT600i  சூப்பர் பைக் மட்டுமே 1000 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள பெனல்லி நிறுவனத்தின் பைக் ரூ.1.68 லட்சம் முதல் ரூ.11.81 லட்சம் வரையிலான விலையில் மொத்தம் 6 மாடல்கள் உள்ளது.  அனைத்து மாடல்களுமே சிகேடி முறையில் இந்தியாவிலே ஒருங்கினைக்கப்படுவதனால் விலை சவாலாக உள்ளதால் போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பெனெல்லி 302 மற்றும் TRK 502 என இரு மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

புனேவில் அமைந்துள்ள டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் ஆலையில் ஆண்டுக்கு 7500 வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆண்டுக்கு 1 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்ய பெனெல்லி திட்டமிட்டுள்ளது.