அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கை வீழ்த்த முடியாத டோமினார் 400

டிவிஎஸ் நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய மாடலாக களமிறங்க உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 170 கிமீ வேகத்தை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

akula310

அப்பாச்சி ஆர்ஆர்310 எஸ் Vs டோமினார் 400

சேலம் முதல் பெங்களூரு நோக்கி  பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலை 44 ல் தினமும் சோதனை செய்யப்பட்டு வருகின்ற புதிய ஆப்பாச்சி RR310 S பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகி வரும் நிலையில் மோட்டோ ஸ்டோரீஸ் எனும் யூடியூப் பதிவாளர் தன்னுடைய டோமினார் 400 பைக் வாயிலாக அதிகபட்சமாக மணிக்கு 155 கிமீ அப்பாச்சி 310 பைக்கை சேஸ் செய்து துரத்தியதிலும் பைக்கை டோமினார் 400 ஆல் நெருங்க இயலவில்லை என்பதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ உறுதி செய்துள்ளது.

TVS Akula 310 concept

அப்பாச்சி ஆர்ஆர்310 எஸ் பைக்கில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே 313சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  34 bhp ஆற்றல் மற்றும் டார்க் 28 Nm வெளிப்படுத்தும் 313சிசி எஞ்ஜினே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கில் இடம்பெற உள்ளது.

சமீபத்தில் இணையத்தில் வெளிவந்துள்ள படங்களில் ஏபிஎஸ் எல்இடி ஹெட்லேப்ப், எல்இடி டெயில் விளக்கு போன்றவற்றை பெற்றிருப்பதுடன் ஜி 310 ஆர் பைக்கின் பாகங்களை பெற்றிருக்கலாம். வருகின்ற ஜூலை மாதம் அப்பாச்சி rr 310 s விற்பனைக்கு வரக்கூடும்.

டோமினாரில் பஜாஜ் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்தினை கொண்டு 35 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 35 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. 0  முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். டோமினார் 400 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 148 கிலோமீட்டர் ஆகும்.