271 கிமீ ரேஞ்சு.., ரெனால்ட் சிட்டி K-ZE (Kwid EV) கார் அறிமுகமாகிறது – ஆட்டோ எக்ஸ்போ 2020

0

க்விட் இவி

2020 ஆட்டோ எக்ஸ்போவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ரெனால்ட் சிட்டி K-ZE (க்விட் EV) மின்சார கார் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதை ரெனால்ட் தனது டீசர் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது.

Google News

கடந்த 2019 ஆம் ஆண்டு ஷாங்காய் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வெளியிடப்பட்ட க்விட் காரின் அடிப்படையிலான கே-இசட்.இ மாடல் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ அரங்கிலும் காட்சிக்கு வரவுள்ளதால் விற்பனைக்கும் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெனால்ட் சிட்டி கே-இசட்இ எல்க்ட்ரிக் காரில் 26.8 கிலோவாட் பேட்டரி மற்றும் 33 கிலோ வாட் மின்சார மோட்டாரை பெற்றுள்ளது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 271 கிமீ (NEDC) ரேஞ்சை வழங்குகிறது. மிக வேகமான சார்ஜிங் முறையில் K-ZE காருக்கு 50 நிமிடங்களில் 0-80% வரை சார்ஜ் செய்ய இலும். அதே நேரத்தில் சாதாரண ஏசி சார்ஜரில் 100% பேட்டரி சார்ஜ் அடைய 4 மணிநேரம் ஆகும்.

தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற க்விட் காரினை போன்றே தோற்ற அமைப்பினை கொண்டிருக்கின்றது. இன்டிரியரில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்நிறுவனம் ஸோயி இவி கார், ஹெச்பிசி உட்பட பல்வேறு கார்களை காட்சிப்படுத்த உள்ளது.