டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் கான்செப்ட் பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

0

tvs zeppelin cruiser concept e1518025222849இந்தியாவின் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய பெர்ஃபாமென்ஸ் ரக க்ரூஸர் மாடலை டிவிஎஸ் செப்பெலின் கான்செப்ட் என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.

டிவிஎஸ் செப்பெலின் கான்செப்ட்

tvs zeppelin cruiser concept bike

சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் வெளியிட்ட நவீன அம்சங்களை பெற்ற 125சிசி ரக ஸ்கூட்டர் மாடலான டிவிஎஸ் என்டார்க் 125 மாடலை தொடர்ந்து ஆட்டோ எக்ஸ்போவில் க்ரியோன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் உட்பட செப்பெலின் ஹைபிரிட் பெர்ஃபாமென்ஸ் க்ரூஸரை காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த க்ரூஸர் கான்செப்ட் மாடல் அதிகபட்சமாக 20 ஹெச்பி ஆற்றல் மற்றும் 18.5 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 220சிசி எஞ்சின் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம்.

அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ள செப்பெலின் பைக் மாடலில் இந்நிறுவனத்தின் காப்புரிமை பெறப்பட்ட ஹைபிரிட் முறையான  Integrated Starter Generator system உடன் இணைக்கப்பட்ட 48 வோல்ட் லித்தியம் ஐயன் பேட்டரி 1200 வாட்ஸ் வரையிலான ரீஜெனரேட்டிவ் மோட்டார் வாயிலாக ஆற்றலை பெற உதவிகரமானதாக அமைந்திருக்கும்.

tvs zeppelin cruiser concept led headlight

டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் கான்செப்ட் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கிமீ ஆக இருக்கலாம்.

பவர் க்ரூஸர் மாடலாக விளங்க உள்ள ஜேப்பெலின் மிகவும் ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லைட், 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் இரு பிரிவு இருக்கைகளுடன், முன்புற டயரில் 300 மிமீ டிஸ்க்  மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றை பெற்றதாக வரவுள்ளது.

செயினுக்கு மாற்றாக பெல்ட் கொண்டு ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கான்செப்ட் மாடலில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட் பையோ கீ எனும் அம்சம் ஆன்லைன் ஆதரவினை பெறுவதுடன் ஹெச்டி ஏக்சன் கேமரா இடம்பெற்றுள்ளது.

tvs zeppelin cruiser concept engine

இதைத் தவிர டி.வி.எஸ் ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை என்டார்க் 125, க்ரியோன் எலெக்ட்ரிக், அப்பாச்சி  RTR 200 Fi எத்தனால் ஆகிய மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.

tvs zeppelin cruiser concept engine tvs zeppelin cruiser concept rear seat