டாடா நெக்ஸான் எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி கார் உற்பத்தி மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வந்துள்ளது.  நெக்ஸான் இம்பேக்ட் டிசைன் மொழியை அடிப்படையாக கொண்டதாகும்.

tata-nexon-suv

பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான என்ஜின் ஆப்ஷனிலும் வரவுள்ள டாடா நெக்ஸான் எஸ்யூவி காரில் 110PS ஆற்றல் மற்றும் 260NM டார்க் வழங்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் . பெட்ரோல் என்ஜினில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் ஆப்ஷனை பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷனை பெற்றிருக்கும்.

போல்ட் மற்றும் ஸெஸ்ட் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள நெக்ஸான் காரின் ரேஞ்ச்ரோவர் எவோக் காரின் தாத்பரியங்களும் டாடாவின் புதிய இம்பேக்ட் டிசேன் மொழி ஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான முகப்பு தோற்றத்தில் டாடாவின் பாரம்பரிய கிரில் அகலமான முகப்பு கிரில் நேர்த்தியான முகப்பு விளக்கு போன்றவற்றுடன் பகல் நேர எல்இடி ரன்னிங் லைட் , பனி விளக்கினை பெற்றுள்ளது. பக்கவாட்டில் 16 இஞ்ச் அலாய் வீல் , சரிவான ரூஃப் ரெயில் போன்றவை குறிப்பிடதக்கதாக உள்ளது. உட்புறத்தில் பல நவீன வசதிகள் மற்றும் ஃபினிஷ் செய்யப்பட்ட இன்டிரியரை பெற்றுள்ளது.

இக்கோஸ்போர்ட் , டியூவி300 மற்றும் வரவிருக்கும் விட்டாரா ப்ரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு போட்டியாக வரவுள்ள நெக்ஸான் எஸ்யூவி இந்த வருடத்தின் மத்தியில் வரவுள்ளது.