டாடா ஹெக்ஸா எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டாடா ஹெக்ஸா எஸ்யூவி காரின் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அரியா எம்பிவி காரை அடிப்படையாக கொண்ட ஹெக்ஸா எஸ்யூவி பிரிமியமாக காட்சியளிக்கின்றது.

tata-hexa-suv

 

ஹெக்ஸா எஸ்யூவி காரில் 156PS ஆற்றல் மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் லிட்டர் வேரிக்கோர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மெனுவல்  மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. ஆட்டோமேட்டிக் , டைனமிக் , ரஃப் ரோடு மற்றும் கம்ஃபோர்ட் என 4 விதமான டிரைவிங் மோட் ஆப்ஷனை பெற்றுள்ளது.

ஹெக்ஸா காரின் நீளம் 4769மிமீ , அகலம் 1895மிமீ மற்றும் உயரம் 1780மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2850மிமீ ஆகும். மேலும் உற்பத்தி நிலை மாடலுக்கும் இதே அளவுகளை பெற்றுள்ளது. 19 இஞ்ச் அலாய் வீலினை கொண்டுள்ளது.

டாடாவின் புதிய பாரம்பரிய கிரிலுக்கு மத்தியில் அமைந்துள்ள லோகோ மற்றும் இரட்டை வண்ண பம்பர் என நேர்த்தியாக உள்ள ஹெக்ஸா காரின் உட்புறத்தில் சிறப்பான பல நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 5.0 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , யூஎஸ்பி , ஆக்ஸ் என பலவற்றை பெற்றுள்ளது.

எஸ்யூவி ரக க்ராஸ்ஓவர் மாடலான டாடா ஹெக்ஸா எஸ்யூவி கார் இந்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது. ஏபிஎஸ் , இபிடி , டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.