புதிய ரெனோ டஸ்ட்டர் , ஏஎம்டி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

ரெனோ ட்ஸ்ட்டர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் மற்றும் Easy-R ஏஎம்டி வேரியண்ட் போன்றவை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை புதிய ரெனோ டஸ்ட்டர் பெற்றுள்ளது.

renault-duster-suv

Google News

முகப்பு தோற்றத்தில் பம்பர் மற்றும் முகப்பு விளக்கு , கிரில் போன்றவை பிரேசில் மாடலை தழுவியே உள்ளது. பக்கவாட்டில் புதிய அலாய் வீல் , புரஃபைல் கோடுகளில் மாற்றம் இல்லை. பின்புறத்தில் புதிய டெயில் விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

டஸ்ட்டர் மேற்கூரை ரூஃப் ரெயில் பவர் ஃபோல்டிங் மிரர் , நேவிகேஷன் சிஸ்டம் , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ரியர் வியூ கேமரா , ஆட்டோ அப்/டவுன் வின்டோஸ் , க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பல குறிப்பிடதக்க வசதிகளை மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டர் பெற்றுள்ளது.

Easy R ஏஎம்டி  கியர்பாக்ஸ் ஆப்ஷன் 110 PS மாடலில் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சவாலான விலையில் ஏஎம்டி கியர்பாக்சினை ரெனோ டஸ்ட்டர் பெற்றிருக்கும். மெனுவல் கியர்பாக்ஸை விட கூடுதலான விலையில் இருவிதமான் ஏஎம்டி ஆப்ஷனை பெறும் வாய்ப்புள்ளது. இந்த வருடத்தின் மத்தியில் புதிய ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு வரவுள்ளது. என்ஜின் ஆற்றல் மாற்றங்கள் இல்லை.

[envira-gallery id="7147"]