ரெனோ க்விட் ஏஎம்டி , 1 லிட்டர் என்ஜின் ஆப்ஷன் – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

ரெனோ க்விட் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என கூடுதல் ஆப்ஷன்களுடன் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது.

ரெனோ க்விட் கார்

Google News

பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் கார் 75,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளுடன் 3 முதல் 6 மாசங்கள் வரை காத்திருப்பு காலம் நீண்டுள்ளது. மேலும் காத்திருப்பு காலத்தை குறைக்கும் நோக்கில் சென்னை ரெனோ நிசான் ஆலையில் மாதம் 10,000 க்விட் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆல்ட்டோ கே10 , ஆல்ட்டோ கே10 ஏஎம்டி மாடலுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் ரெனோ க்விட் ஏஎம்டி மற்றும் க்விட் 1 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் என இரண்டு வேரியண்டிகளில் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் வரவுள்ள புதிய க்விட் 1 லிட்டர் மாடலில் ஏபிஎஸ் மற்றும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் ஆப்ஷனலாக இணைக்க வாய்ப்புள்ளது.

தற்பொழுது ஆல்ட்டோ 800 , இயான் , கோ , நானோ போன்ற கார்களுக்கு மிகுந்த போட்டியை ஏற்படுத்தியுள்ள க்விட் காரில்  கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் வந்தால் ஆல்ட்டோ கே10 கார் நேரடியான சவாலினை எதிர்கொள்ளும். மேலும் க்விட் ஏஎம்டி ஆப்ஷன் நல்ல வரவேற்பினை பெறும் என்பதனால் நானோ ஏஎம்டி , கே 10 ஏஎம்டி போன்ற கார்களுடன் சவாலினை சந்திக்க உள்ளது.