பிஎம்டபிள்யூவி 7 சீரிஸ் டீசர் – ஆட்டோ எக்ஸ்போ 2016

0

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடல் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் விற்பனைக்கு வருவதனை பிஎம்டபிள்யூ உறுதி செய்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ லேசர்பீம் லைட் ஆப்ஷனுடன் வருவதனை உறுதிசெய்துள்ளது.

bmw-7series-teased

Google News

வரும் பிப்ரவரி 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியிலோ அதற்க்கு முன்னதாகவோ புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடல் விற்பனைக்கு வரலாம். ஸ்டான்டர்டு மற்றும் லாங் வீல்பேஸ் என இரண்டு வேரியண்டிலும் கிடைக்கும்.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 730Ld மற்றும் 740Li  என இரண்டு விதமான வேரியண்டில் வரவாய்ப்புகள் உள்ளது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740Li மாடலில் 320பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 3.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450என்எம் ஆகும்.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 730Ld மாடலில் 259பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 3.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 650என்எம் ஆகும்.

அனைத்து என்ஜின் ஆப்ஷனிலும் 4 விதமான டிரைவ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அவை கம்ஃபோர்ட் , ஈக்கோ -புரோ , ஸ்போர்ட் மற்றும் புதிய அடாப்டிவ் மோட் ஆகும்.

மேலும் பல சொகுசு வசதிகளை கொண்ட மாடலாக விளங்கும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் விலை ரூ.1.5 கோடியை எட்டலாம்.

 

2016-BMW-7-Series