பஜாஜ் பல்சர் 200NS மீண்டும் வருகை

0

பஜாஜ் பல்சர் RS200 மற்றும் பல்சர் AS200 பைக்குகளில் வருகைக்கு பின்னர் பல்சர் 200NS சந்தையை விட்டு வெளியேறியது.  தற்பொழுது பல்சர் 200NS பைக்கினை ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஆப்ஷன் மாடலாக மீண்டும் சந்தைக்கு வரவுள்ளது.

pulsar-200ns-blue

Google News

சந்தையில் சிறப்பான வரேவற்பினை பெற்றிருந்த பல்சர் 200என்எஸ் மாடல் பல்சர் RS200 மற்றும் பல்சர் AS200 வருகையால் விற்பனை குறைய தொடங்கியிருந்த நிலையில் பஜாஜ் பல்சர் 200என்எஸ் மாடலை நீக்கியது. தற்பொழுது பல்சர் 200NS FI என்ற பெயரில் சிறிய தோற்ற மாற்றங்களை மட்டுமே பெற்றிருக்கும் மாடலாகவும். பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் உள்ள 24.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மாடலாகவும் மீண்டும் வரலாம்.

பல்சர் RS200 மற்றும் பல்சர் AS200 மாடல்களுக்கு இடையில் அதாவது ஆர்எஸ்200 மாடலுக்கு கீழாகவும் ஏஎஸ்200 மாடலுக்கு பல்சர் 200NS FI நிலைநிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இதன் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கலாம் என தெரிகின்றது. மேலும் ஏபிஎஸ் ஆப்ஷனலாக பொருத்தப்பட்டிருக்கலாம்.

2016ம் ஆண்டின் மத்தியில் புதிய பல்சர் 200NS FI மாடல் விற்பனைக்கு வரும் . மேலும் 2016 ஆம் ஆண்டில் பல்சர் CS400 மற்றும் பல்சர் RS400 பைக்குகளும் வரவுள்ளன.

pulsar-200ns-red

Bajaj pulsar 200NS comeback 2016