பயணிகளிடம் விரும்பும் சிறுவன் கண்டுபிடித்த பஸ்-டிராகிங் ஆப்

0

பெங்களுரை சேர்ந்த சிறுவன் நிகில் தக்கார் என்ற 14 வயது சிறுவன் கண்டுபிடித்த பஸ்-டிராகிங் ஆப் பயணிகள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

பெங்களுர் போக்குவரத்து துறை இதுவரை செய்யாத இந்த பஸ்-டிராகிங் ஆப் கண்டுபிடித்துள்ள இந்த சிறுவனின் Bengaluru Buses — Track BMTC buses in real time என்ற பெயரை கொண்ட ஆப், தற்போது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இதுவரை இந்த ஆப் 60 ஆயிரம் முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

Google News

இந்த ஆப் குறித்து பேசிய சிறுவன் நிகில் தக்கார், தான் தினமும் வீட்டிலிருந்து பஸ்சில் பயணம் செய்து வந்தேன். பஸ் வரும் நேரத்தை அறிய போக்குவரத்து துறையின் அப்ளிகேஷனை பயண்படுத்தி வந்தேன். இந்த் அப்ளிகேஷன் மிகவும் தாமதமாகவும், பயன்படுத்த எளிதாகவும் இல்லை.

இதனால், பஸ் பயணிக்கும் நேரம், பயணிக்கும் இடம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த அப்ளிகேஷனின் முதல் வெர்சனை கொண்டு வந்தேன். இந்த அப்ளிகேஷன் வெளியிடப்பட்டதும் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மாதம் தோறும் சராசரியாக 8000 பயணிகள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்கின்றனர் என்றார்.