சென்னையில் அமைந்துள்ள டைம்லர் ஏஜி நிறுவனத்தின் பாரத் பென்ஸ் டிரக் தயாரிப்பு ஆலையில் புதிய விற்பனை இலக்கை கடந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 50,000 டிரக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
பாரத் பென்ஸ் டிரக்
டைம்லர் பென்ஸ் குழுமத்தின் இந்தியாவில் பாரத் பென்ஸ் என்ற பிராண்டு பெயரில் 2012 ஆம் ஆண்டில் சென்னை ஒரகடத்தில் அமைந்துள்ள ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டு முதல் 10,000 விற்பனை இலக்கை 2014 ஆம் ஆண்டில் முதன்முறையாக கடந்தது. தற்போது மூன்று ஆண்டுகளுக்கு 40,000 டிரக்குகளை விற்பனை செய்து 4928 TT ஹெவி டூட்டி டிரக் மாடலை 50 ஆயிரமாவது டிரக்காக ஹைத்திராபாத்தில் டெலிவரி கொடுத்துள்ளது.
இந்தியாவில் பிஎஸ் 4 தர மாசு கட்டுப்பாடு எஞ்சின்களை பெற்றுள்ள புதிய பாரத் பென்ஸ் டிரக்குகள் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வெளிப்படுத்தக்கூடிய மாடலாகவும், குறைந்த விலை பராமரிப்பு செலவுகொண்டதாக அமைந்துள்ளதாக விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் பிரிவு துனை தலைவர் ராஜாராம் கிருஷ்னமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாரத் பென்ஸ் நிறுவனம் தன்னுடைய டிரக் மாடல்களில் பிஎஸ்4 எஞ்சினுடன் கூடிய எஸ்சிஆர் நுட்பத்தை இணைத்துள்ளது.இந்த நுட்பத்தின் வாயிலாக சுற்றுசூழலில் மாசு ஏற்படுவது பெருமளவு குறைக்கப்படுகின்றது. பாரத் பென்ஸ் 16டி இன்டர்சிட்டி கோச் பேருந்தை சில மாதங்களுக்கு முன்பாக வெளியிட்டது.