Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

600 உயிர்களை பலி வாங்கிய மாடு ரயில் சோகம்

by automobiletamilan
May 15, 2017
in Wired, செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய ரெயில்வே நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் நமது நாட்டின் ரெயில்வே வரலாற்றில் 600 உயிர்களை பலி வாங்கிய மிக கோரமான விபத்தை பற்றி சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பீகார் ரயில் விபத்து

1981 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்திய ரயில்வே வரலாற்றில் மிக கோரமான விபத்தை சந்தித்த நாளாகும். மான்சி முதல் சஹார்சா நோக்கி பயணித்த இந்த தொடர்வண்டியில் 9 பெட்டிகளில் சுமார் 800 க்கு மேற்பட்ட பயணிகள் இருந்திருக்கலாம், என்று நம்பப்படுகின்றது.

மான்சிலிருந்து சஹார்சா நோக்கி மிக கடுமையான மழையில் பயணித்து கொண்டிருந்த இந்த ரயில் நோபாள நாட்டின் சிவபுரி எனும் இடத்தில் தொடங்கும் பாக்மதி (இந்தியாவின் கங்கை போன்ற பெருமையை நேபாள நாட்டில் பெற்றுள்ளது ) என்ற ஆற்றின் குறுக்கே பாலகாட் எனுமிடத்தில் கடக்க வேண்டிய பாலத்தில் மாடுகள் குறுக்கே வந்ததில் எஞ்சின் ஓட்டுநரின் மிக கடுமையான பிரேக்கினால் தடம் புரண்டதில் 9 பெட்டிகளும் காட்டாற்று வெள்ளத்தில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் பயணித்த பயணிகளில் 400 முதல் 600 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அறியப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த விபத்தில் 5 நாட்களுக்கு பிறகு 286 சடலங்கள் மீட்கப்பட்டாலும், 300 க்கு அதிகமான மற்றவர்களின் நிலை பற்றிய எந்த தகவலும் இல்லை. இந்த விபத்துக்கு பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டாலும் சில முக்கியமானவை பின்வருமாறு :-

  • இருப்பு பாதையை கடக்க முயன்ற மாடுகளை கண்ட எஞ்சின் டிரைவர் மிக கடுமையான பிரேக் முறையை கையான்டதில் ரயில் தடம் புரண்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.
  • கடுமையான மழைக்காலம் என்பதனால் ரயில் இருப்பு பாதை காட்டாற்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து எங்கேயும் உறுதியான தகவல் வழங்கப்படவில்லை. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400 என குறிப்பிடப்படுகின்றது. இந்திய ரயில் வரலாற்றில் மிக கோரமான விபத்தாக கருதப்படுகின்றது.

பீகார் ரயில் பேரழிவு குறிப்புகள்
  • ஜூன் 6, 1981 ஆம் ஆண்டு இந்த ரயில் பேரழிவு  நடைபெற்றது.
  • விபத்தில் 400 முதல் 600 பயணிகள் இறந்திருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
  • விபத்திற்கான காரணம் மாடுகள் மற்றும் எஞ்சின் டிரைவர் அல்லது காட்டாற்று வெள்ளமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

For more news from AutomobileTamilan, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan

Tags: ரயில்
Previous Post

சென்னையில் ரெனோ-நிசான் உற்பத்தி நிறுத்தம் : சைபர் தாக்குதல்

Next Post

மாருதி சுசுகி டிசையர் காரின் சாதனை துளிகள்

Next Post

மாருதி சுசுகி டிசையர் காரின் சாதனை துளிகள்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version