சல்மான்கான் மென்ட்ல் கையில் சுசுகி ஜிடபிள்யூ 250 பைக்

0
சல்மான்கான் நடித்துவரும் படத்தின் பெயர்தான் மென்ட்ல் இந்த படம் இந்த ஆண்டிலே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மென்ட்ல் படத்தில்  சுசுகி ஜிடபிள்யூ 250 பைக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மென்டல் படம் வெளிவரும்பொழுதே சுசுகி ஜிடபிள்யூ 250 பைக்கும் வெளிவர அதிக வாய்ப்புள்ளது. இன்சூமா 250 என்ற பெயரில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் இந்த பைக் இந்தியாவில் ஜிடபிள்யூ 250 என்ற பெயரில் வெளிவரும்.

salman+suzuki+gw+250

சல்மான்கான் நடித்து வரும் மென்ட்ல் படத்தில் இந்த பைக் பயன்பட்டுவருவதாக ஒரு இனையதளத்தில் படம் வெளியாகியுள்ளது. இந்த பைக்கானது ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஹாயாசாங் ஜிடி250ஆர், கவாஸாகி நின்ஜா 300 மற்றும் விரைவில் வெளியாக உள்ள கேடிஎம் 390, போன்ற பைக்களுக்கு சவாலை ஏற்படுத்தும்.

சுசுகி ஜிடபிள்யூ 250 பைக்கில் 248சிசி திரவம் மூலம் குளிர்விக்கப்படும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 25 பிஎஸ் மற்றும் டார்க் 24 என்எம் ஆகும்.

சுசுகி ஜிடபிள்யூ 250 பைக் விலை விபரங்கள் போன்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. வருகிற செப்டம்பர் மாதம் மென்டல் படம் வரலாம் அதனை தொடர்ந்து சுசுகி ஜிடபிள்யூ 250 பைக் விற்பனைக்கு வரும்.