சிபி ஹார்னெட் 160 ஆர் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா டூ வீலர் நிறுவனத்தின் ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக்கில் சிறப்பு எடிசனை ரூ. 91,727 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இருவிதமான வண்ணத்தில் சிறப்பாக சிபி ஹார்னெட் 160 ஆர் ஸ்பெஷல் எடிசன் ( Honda CB Hornet 160R Special Edition) அமைந்துள்ளது.

honda-cb-Hornet-160r-Striking-Green-special-edition

சிறப்பு எடிசனில் கூடுதலாக வண்ணங்களை மட்டுமே பெற்றுள்ளது. ஆற்றல் மற்றும் ஸ்டைலில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.  சிறப்பு பதிப்பு பைக்கில் ஸ்ட்ரைக்கிங் கீரீன் மற்றும் மார்ஸ் ஆரஞ்சு என இரு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சாதரன வேரியண்டை விட ரூ.999 கூடுதலாக அமைந்துள்ளது.

மிக சிறப்பான கருப்பு வண்ண அமைப்பில் இரு வண்ணங்களை இணைத்து மிக நேர்த்தியாக ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. அலாய் வீலில் பின்ஸ்டைர்ப் , கருப்பு வண்ணத்தில் இருக்கை அடியில் அமைந்துள்ள கவர் , கிராப்ரெயில் , புகைப்போக்கி மஃபலர் கவர் என அனைத்திலும் பிளாக் நிறத்தில் உள்ளது.

honda-cb-Hornet-160r-mars-orange-special-edition

 

சிபி ஹார்னெட் 160 R பைக் பெற்றிருந்தாலும் ஆற்றல் 15.7 பிஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இதன் டார்க் 14.76 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.  ஹார்னெட் 160R பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.95 கிமீ ஆகும்.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் வாங்கலாமா ?

ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் ஸ்பெஷல் எடிசன் விலை

சிபி ஹார்னெட் 160R STD – ரூ. 91,727

சிபி ஹார்னெட் 160R CBS – ரூ. 96,641

150 சிசி சந்தையில் மிக சிறப்பான மாடலாக விளங்கும் ஹார்னெட் 160R பைக்கின் போட்டியாளர்கள் சுசூகி ஜிக்ஸெர் , யமஹா FZ-S V2.0 மற்றும் பல்சர் 150 போன்றவை  ஆகும்.

[envira-gallery id=”4234″]