சுசூகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் விற்பனைக்கு வந்தது

ஃபுல் ஃபேர்டு சுசூகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுசூகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்

விற்பனையில் உள்ள ஜிக்ஸெர் பைக்கில் கூடுதலாக ஃபேரிங் பேனல்கள் பொருத்தி நேர்த்தியான தோற்றத்தில் ஜிக்ஸெர் எஸ்எஃப் மற்றபடி பலவற்றை ஜிக்‌ஸெர் பைக்கில் உள்ளதுதான்.

அலங்கரிக்கப்பட்டுள்ள பேனல்கள் மிக சிறப்பான ஏரோடைனமிக்ஸ் நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. 14.8பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 155சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 14என்எம் ஆகும். 5 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

சுசூகி ஈக்கோ பெர்ஃபாரமன்ஸ் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் மிக சிறப்பான செயல்திறன் மற்றும் லிட்டருக்கு 63.5கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலஸ்கோப்பில் ஃபோர்க்கும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் இருக்கிறது. முன்பக்கத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது. அவை நீலம் , கருப்பு மற்றும் வெள்ளை ஆகும். மோட்டோஜிபி எடிசன் நீல வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

இளம் வாடிக்கையாளர்களை  ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்  பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுசூகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் விலை

சுசூகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் விலை