சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

0

சுஸூகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சுஸூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் ஸ்பெஷல் எடிஷன்  விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கிளாசிக் தோற்றத்தினை கொண்டு வரும் நோக்கில் மெரூன் வண்ணத்திலான இருக்கை போன்றவற்றுடன் கூடுதலான மாற்றங்களை பெற்றுள்ளது.

பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள ஆக்செஸ் 125 பைக்கில் தோற்ற மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது. எஞ்சின் ஆற்றல் போன்ற விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை. சமீபத்தில் சுஸூகி ஜிக்ஸெர் SP மற்றும் ஜிக்ஸர் SF SP  சிறப்பு பதிப்பு அறிமுகம் செயப்பட்டுள்ளது.

Google News

8.7 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 124சிசி என்ஜினை பெற்றுள்ள இதன் டார்க் 10.2 Nm ஆகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 64 கிமீ ஆகும்.  முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ஸ்விங் ஆர்மினை பெற்றுள்ளது. முன்பக்கம் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷன் பின்புறத்தில்  டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ரெட்ரோ உணர்வினை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ள ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் மெரூன் கலரில் இருக்கை , க்ரோம் பூச்சு கொண்ட வட்ட வடிவ ரியர் வியூ மிரர் , பிரவுன் வண்ண ஃபூட்போர்டு முகப்பு லேம்ப் , புகைப்போக்கி போன்ற பகுதிகளில் க்ரோம் பூச்சூ போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் சேர்க்கப்பட்டுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் என இருவிதமான பிரேக் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.

சுஸூகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிசன் விலை

ஆக்செஸ் 125 டிரம் பிரேக்  – ₹. 55,589

ஆக்செஸ் 125 டிஸ்க் பிரேக்  – ₹. 58,589

[foogallery id=”9901″]