பஜாஜ் டிஸ்கவர் 125டி பைக் விலை விபரம்

0
பஜாஜ் டிஸ்கவர் 125டி பைக் சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த வருடம் விற்பனைக்கு வந்த டிஸ்கவர் 125எஸ்டி பைக்கினை சில மாற்றங்கள் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டிஸ்கவர் 125எஸ்டி மிக சிறப்பான விற்பனையான பைக்காகும். மேலும் விற்பனையை அதிகரிக்கவே 125டி என்ற பெயரில் பஜாஜ் கொண்டு வந்திருக்கின்றது.
பஜாஜ் டிஸ்கவர் 125டி
125எஸ்டி பைக்கில் இருந்து 125டி பைக்கின் மாறுபட்ட வசதிகள் 125எஸ்டி பைக்கில் பின்புறத்தில் மோனோசஸ்பென்ஷன் ஆனால் டிஸ்கவர் 125டி பைக்கில் நைட்ராக்ஸ் கேஸ் சஸ்பென்ஷன் ஆகும். சிறப்பான இடவசதியை தரும் வகையில் சற்று நீளமான இருக்கை கொண்டுள்ளது. மேலும் டேங்க் கிராஃபிக்ஸ் சற்று மாற்றமடைந்துள்ளது.
என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 125எஸ்டி பைக்கில் பயன்படுத்தப்பட்ட 124.6 டிடிஎஸ்ஐ என்ஜினே 125டி பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 12.3பிஎச்பி @ 9000ஆர்பிஎம் மற்றும் டார்க் 10.8என்எம் @ 6500 ஆர்பிஎம் ஆகும்.
பஜாஜ் டிஸ்கவர் 125டி விலை (சென்னை எக்ஸ்ஷோரூம்)
பஜாஜ் டிஸ்கவர் 125டி – ரூ. 54,022 (ட்ரம் பிரேக்)
பஜாஜ் டிஸ்கவர் 125டி – ரூ. 57,070 ( முன்புறத்தில் டிஸ்க் பிரேக்)