பஜாஜ் டிஸ்கவர் 125 st சிறப்பு அலசல்

0
பஜாஜ் டிஸ்கவர் 125st பைக் பற்றி சிறப்பு அலசல் மற்றும் விவரங்களை கானலாம். பஜாஜ் டிஸ்கவர் 125 எஸ்டி பைக் மைலேஜ் லிட்டருக்கு 50 முதல் 56 கிமீ நகரங்களில் மற்றும் நெடுஞ்சாலையில் 60 முதல் 65 கிமீ வரை கிடைக்கின்றதாம்.

bajaj+discover+125+st

பஜாஜ் டிஸ்கவர் 125 எஸ்டி  பைக்கில் 124.66 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் ஆற்றல் 12.8 பிஎச்பி @ 9000 ஆர்பிஎம் ஆகும். டார்க் 10.78என்எம் @ 7000 ஆர்பிஎம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பின்புறத்தில் ட்ரம் பிரேக் பயன்படுத்தியுள்ளனர். 65 முதல் 75 கிமீ மைலேஜ் பஜாஜ் சொன்னாலும் மேலே குறிப்பிட்ட மைலேஜ்தான் பலரின் அனுபவத்தின் வாயிலாக கிடைக்ககூடிய மைலேஜ் ஆகும். 4 வண்ணங்களில் பஜாஜ் டிஸ்கவர் 125 st கிடைக்கின்றது.

Google News

சிறப்பான கையாளுதல் திறனை வெளிப்படுத்தக்கூடிய பைக்காக விளங்குகின்றது. நிலைப்புதன்மை மற்றும் பிரேக்கிங் போன்றவை சிறப்பாக உள்ளது மேலும் பணத்திற்க்கான மதிப்பினை தரக்கூடிய பைக்காக இருக்கின்றது.

கேஸ்வல் பைக் போன்ற லுக் மைனஸ் என்றாலும், ஸ்டைல் பற்றி கவலைப்பட தேவையில்லை , டீயூப்பலஸ் டயர்கள் கிடையாது.

bajaj discover 125st

ST என்பதற்க்கு விளக்கம் SPORT TORUER ஆகும். மற்றபடி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்சின்தான். 4 வால்வ்கள் பொருத்தப்பட்டுள்ளதால் ஆற்றல் முழுமையாக கிடைக்கும்.

பஜாஜ் டிஸ்கவர் 125 st விலை ரூ 55,500 (சென்னை எக்ஸ்ஷோரூம் ஆகும்)

பஜாஜ் டிஸ்கவர் 125st
Reviewed by Rayadurai on Mar 27 2013
Rating: 4/5